வியாழன், 24 ஜூலை, 2025

ARC-G2-060

 



நள்ளிரவு நேரத்தில் தனியாக ரயில்வண்டியில் வந்து இறங்குகிறாள் ஓர் இளம்பெண். அந்த நிலையத்தில், ரயில்வண்டியில் சிலர் ஏறினார்களே தவிர, அவளைத்தவிர வேறு எவரும் இறங்கவில்லை. சில கிலோமீட்டர் தொலைவில் அவளது கிராமம் இருந்தது. எப்படித் தனியாகப் போவது என்று மிகக் கவலைப்பட்டாள் அவள். . வெளியே வந்து பார்த்தால், ஒரு வண்டியும் காணவில்லை. அச்சமும் கவலையும் மனத்தை ஒரு சேர அழுத்திய கணத்தில், “வீட்டுக்கா அம்மா?” என்று குரல் கேட்டது. அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவளது கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் நின்றிருந்தார். . “நம்ம ஊரிலிருந்து ரயிலேற வந்த ரெண்டு பேர கூட்டிக்கிட்டு வந்தம்மா வாங்கம்மா என் மாட்டு வண்டியிலேயே போயிடலாம்” என்று அழைத்தார் அவர். அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்ததைப் போல இருந்தது. . எந்தக் காலத்திலும் மாட்டு வண்டியில் ஏறாதவளுக்கு, அந்தப் பயணம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்தது. “வேண்டாம் என்று சொன்னாலும், இந்தப் பெரியவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட வேண்டும்” என்று எண்ணிக் கொண்டாள். . ஒரு கிலோ மீட்டர் தூரம் வண்டி போனதும், “நூறு ரூபாய் அதிகம் ஐம்பது ரூபாய் கொடுக்கலாம்” என்று எண்ணிக்கொண்டாள். இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், “மாட்டு வண்டிக்குப் பத்து ரூபாய் போதாது?” என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். வீட்டை நெருங்கும் நேரத்தில், எப்படி இருந்தாலும் வண்டி ஊருக்குத் திரும்பியிருக்கும். காலியாய் திரும்பும் வண்டியில்தானே வந்தேன். எதற்குப் பணம் தர வேண்டும்? நன்றி சொல்லி விடலாம்” என்று எண்ணிக்கொண்டாள். . வீட்டில் இறங்கும்போது, “சரி தாத்தா! மாட்டு வண்டியில் இதுவரை போனதே இல்லையா. அதான் முதுகெல்லாம் வலிக்கிறது” என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அந்த முதியவர் எதுவும் எதிர்பார்க்காமல் உதவி செய்தார். இந்த கதையை போலத்தான் உழைக்கும் வர்க்கத்து மக்களை நாம் எப்போதுமே குறைவாகவே மதிக்கிறோம். ஆனால் பத்து பைசா பெறாத பிரிமியம் பிராண்ட்களின் ப்ராடக்ட்களை அதிக காசு கொடுத்து வாங்குகிறோம். பணக்கார வாழ்க்கை வாழவேண்டும் என்று ஹோட்டல்களில் கண்டபடி செலவு செய்கிறோம். உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தையும் அவர்களுடைய வளர்ச்சியையும் யோசிப்பதே இல்லை/ 


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...