ஒரு மனுஷன் , மனதளவில் கூட யாரையும் காயப்படுத்த நினைக்க மாட்டான், ஆனால் அந்த மனுஷன் வாழவேண்டிய 27 வயதில் சாலை விபத்தில் கொடூரமாக காலமாகிவிட்டதுதான் இன்னைக்கு வலைப்பூ ரசிகர்களுக்கு நான் சொல்ல நினைக்கும் துக்கமான தகவல். என்னுடைய கண்களுக்கு முன்னாடியே நிறைய பாவங்களை செய்து நிறைய பேருடைய வாழ்க்கை பாதிக்கப்பட காரணமாக இருந்த நிறைய ஆட்கள் மிக்கவுமே சந்தோஷமாக இருப்பதை பார்க்கிறேன், மேலுமே அந்த ஆட்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்கிறார்கள், இதுக்கு மேலே கடவுள் அவர்களை தண்டித்தால் என்ன தாண்டிக்காமல் இருந்தால் என்ன ? சொத்து மதிப்பு எல்லாம் எல்லோருக்குமே கோடிக்கணக்கில் இருக்கிறது, சரியான வழியை தேர்ந்தெடுக்க தவறுவதால் மட்டுமே இப்போதைக்கு நடந்துகொண்டு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் மிகவும் சிக்கலான பிரச்சனைகளாகவே எனக்கு தோன்றுகிறது, இங்கே யாராக இருந்தாலும் ஏழையாக இருந்து கடன் வாங்குவது சுலபமான விஷயமாக இருக்கும். ஆனால் கடனை அடைப்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடுகிறது. இது சம்மந்தமாக நன்றாக கவனிக்க வேண்டும். இப்போது பிரச்சனை என்னவென்றால் கடவுள் சுயநலமாக மூளைக்கு பதிலாக மலத்தை மட்டுமே நிரப்பிக்கொண்டு அவருக்கு சப்போர்ட் பண்ணுபவர்களுக்கு மட்டுமே செல்வங்களை கொடுக்கிறார், இது அடிப்படையில் எல்லோருமே வெறுக்கும் ஒரு பொய்யை போல தோன்றலாம் ஆனால் இந்த உலகத்தின் அனைத்து பிரிவினையை பாருங்கள், இந்த உலகத்தில் மரங்களை வெட்டுபவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் சேருகிறது அதுவே சின்னதாக தோட்டம் அமைத்து இலாபம் ஈட்ட நினைக்கும் விவசாயியிடம் எதுவுமே இல்லை. கடவுள் கெட்டவராக மாறிவிட்டார். கடவுள் பேசிக்காக இந்த உலகத்தின் அனைத்து பாவங்களையும் செய்ய குறிப்பிட்ட சில பேரை மட்டுமே தெரிந்தெடுத்து அவர்களுடைய சக்தியை அதிகப்படுத்துகிறார், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள் மேலும் உயர் பதவிகள் மறுக்கபடுகிறார்கள். அதுவே அநியாயத்தின் பாதையில் சென்றால் எல்லாமே சந்தோஷமாக முடிகிறதே ? இது எப்படி சாத்தியம் ஆகிறது ? அநியாயம் செய்து மேலாக வருபவர்களுக்கு கொட்டி கொட்டி கொடுக்கவேண்டும் என்று கடவுள் முடிவு எடுத்ததாக இருந்தால்தான் இப்படி நடக்கும், நான் கடவுள் மறுப்பு கொள்கை சொல்லவில்லை, மாறாக கடவுள் இப்போது எல்லாம் கொடியொருக்கு ஏகப்பட்ட சப்போர்ட் போடுகிறார் என்றே சொல்கிறேன். எனக்கு தெரிந்த நல்ல மனிதர்கள் வாழ்க்கையில் எல்லாம் விபத்து போல ஒரு விஷயம் ஏதாவது நடந்தது பெரிய இழப்பு உருவாகிறது, பின்னாட்களில் அந்த இழப்பில் இருந்து மேலே வரவே முடியாமல் கடைசி வரை சாப்பாடு கஷ்டம் அவர்களுக்கு இருக்கிறது. இது எல்லாமே ஏதோ ரொம்ப தப்பாக யாருக்குமே தோன்றவில்லையா ? நம்ம மூச்சு தண்ணீருக்கு வெளியே இருக்கும் வரைக்கும் நமக்கு எதுவுமே தெரியாது அதுவே நம்முடைய மூச்சு தண்ணீருக்குள்ளே சென்றால் நொடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியாது, கடனில் மாட்டிக்கொண்டு போதுமான பலம் இல்லாமல் பேந்த பேந்தன்னு கண்ணு முழிக்கும் மக்களின் நிலைமையும் இதுதான் கடன் இருக்கும் வரை கொண்டாடுவானுங்க, கடன் தொகை காலியானதும் வட்டி கட்ட முடியாம கஷ்டப்படுவாங்க. இவங்க நிலமை அப்படி ! இப்படி ஒரு நல்ல மனிதன் சாலை விபத்தில் போகும்போதும் கொடியவர்கள் சந்தோஷமாக இருக்கும்போதுதான் கடவுள் வக்கீல் என்பவர் வக்கீல் வண்டு போல இருக்கிற இடத்தில் இருந்தே நல்லவர்கள் கட்சியில் இருந்து கெட்டவர்கள் கட்சிக்கு தாவிவிட்டார் என்று தோன்றுகிறது. நிஜமாகவே கெட்டவர்கள் எல்லோருமே சந்தோஷமாக இருப்பதை நான் பார்க்கிறேன் ஆனால் நல்லவர்கள் எல்லாவற்றையுமே இழந்து ரொம்ப கஷ்டப்படுகிறார்கள், உதவி பண்ண மட்டுமே இல்லை சேர்ந்ததாக 4 வார்த்தை பேசவும் கூட மற்றவர்கள் கூச்சப்படும் அளவுக்கு நல்லவர்கள் எல்லாமே இழந்து அழுக்கு உடைகள் அழுக்கு உடல் எல்லாவற்றையும் பறிகொடுத்த சோகம் என்று என்னவோ போல இருக்கிறார்கள், கடவுள் நினைத்தால் அவருடைய சக்தியால் ஒரு நொடியில் எல்லாமே மாற்றிவிடலாம் என்று தெரிந்தும் கடவுள் ஒண்ணும் பண்ணாமல் கெட்டவர்களோடு சேர்ந்து சொர்க்கத்தையே கெட்டவர்களுக்கு பூமியில் அமைத்து கொடுத்து பார்ட்டி பன்னும்போது சூரரை போற்று படத்தில் "நான் இது எல்லாம் உனக்கு நெனச்சா பண்ணலாம் ஆனால் பண்ணமாட்டேன்" என்று வில்லன் சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. இப்போ இந்த போஸ்ட் பார்த்ததும் இவன் வில் அம்பு கடவுளையோ , சிலுவை கடவுளையோ நோன்பு கடவுளையோ தவறாக பேசுகிறான் என்று போர்க்கொடியை உயர்த்தி வரவேண்டாம். கடவுள் இதுபோல கெட்டவர்களை வளர்த்து விடறது பார்த்து எனக்கு பயமாக இருக்கு, நாளைக்கே எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் இந்த சமூகத்தில்தான் வாழவேண்டும். இப்படி குற்றவாளிகளை வளர அனுமதிப்பதும் நல்லவர்களை சாலை விபத்தில் சாகடிப்பதும் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.
No comments:
Post a Comment