Tuesday, July 22, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 015


இது எப்படி சாத்தியமாகும் என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இங்கே தொடர்ந்து மக்களுக்கு நடக்கக் கூடிய அநியாயங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அரசியல் சார்ந்த பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிறைய பேரு இங்கே நிறைய தவறான காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் இந்த விஷயங்களையெல்லாம் காவல் துறை கூட நிறைய நேரங்களில் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இப்படியே இருந்தால் மக்களுடைய நிலைமை என்ன ஆவது மக்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக மட்டும் தான் காவல்துறையை நம்புகிறார்கள். இந்த சமூகத்தின் சிஸ்டத்தை நம்புகிறார்கள். ஆனால் இந்த சமூகத்தின சிஸ்டமே பணக்காரர்களுக்கு மட்டும் தான் வேலை செய்கிறது என்றால் பணக்காரர்கள் நினைத்தால் யாரை வேண்டுமென்றாலும் காயப்படுத்தலாம் என்றாலோ, பணக்காரர்கள் நினைத்தால் யாருடைய பணத்தை வேண்டுமென்றாலும் அபகரித்துக்கொண்டு அவர்களுடைய பணத்தை எப்படிக்காக போராடினாலும் திரும்ப கொடுக்க முடியாத அளவுக்கு கெட்டியாக பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம் என்றால் இதெல்லாம் எங்கே சென்று முடியப்போகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில் இந்தியன் பாகம் இரண்டு என்ற ஒரு காவியத்தை பார்க்க நேர்ந்தது. இந்த காவியத்தில் நமது கதாநாயகர் அவருடைய இஷ்டத்துக்கு வரும் மக்களை அவமானப்படுத்துகிறார்கள். மேலும் மேற்கொண்டு கதாநாயகர் இந்த உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் இருக்கக்கூடிய தவறான ஆட்களை எல்லாம் ஒரு நாளுக்கு ஒருவர் அல்லது ஒரு வாரத்துக்கு ஒருவர் என்று தண்டனை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.என்றால். மேலும் அந்த தண்டனைகள் மிகவும் மோசமானதாக மிகவும் கேவலமானதாக இருக்கிறது என்றால் இதுபோன்ற விஷயங்கள் ஒரு சராசரியான இன்ஸ்பிரேஷனாக ஆகுமா? இந்தியன் 2 படம் எந்த வகையில் தவறிப் போனது என்பதை நாம் இன்னொரு போஸ்ட்டில் பார்க்கலாம். இங்கே இந்த விஷயங்களுக்கான சரியான தீர்வு என்ன என்று கேட்டால் சம்பந்தப்பட்ட அனைவர்களுக்கும் போதுமான அளவு தண்டனை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் தண்டனைகளைக்காக பயந்து திட்டத்தை சரியாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு பார்த்துக் கொள்வார்கள். மேலும் ஒரு திட்டம் என்றால் அந்த திட்டம் மிகச் சரியாக 100% கொண்டு மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறதா என்பதை.மக்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

No comments:

ARC-G2-053

   ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...