ஒரு ஊரில் ஒரு திருடன் அவன் திருடாத இடமே இல்லை, ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து தப்பித்து வந்தான். ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்துததந்தால் ருபாய் ஐந்து லட்சம் என ஆனையிட்டார். "இது ஒருபுறம் இருக்கட்டும்" சில நாட்கள்கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து, யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்துவிடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிபார்த்து அழைத்துவாரும் என ஆனையிட்டார். மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டான். மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூரியுள்ளார். நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன். என உறுதி அளித்தான். சரி என இந்த திருடனும் சம்மதித்தான். அந்த திருடனுக்கு, திருநீறும் ருத்ராட்சமும் போட்டு ஒரு சன்யாசி போல் வேடம்மிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல், கடைசியாக அவர் தன் ராஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் தா, நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளைவிட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின் வேண்டுதளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார். ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வனங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மலை தருவேன் அதை எற்றுக்கொள்க என, இந்த சன்யாசி வேண்டாம் என்றார். பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, பனம், என தானமாக தந்தார். இந்த சன்யாசி எதுவும் வேண்டாம் என்றார். பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன். நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும் என்றார். (இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம் சொன்னது போலவே நடிக்கின்றான். என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்) ஆனால் அந்த சன்யாசி வேண்டாம் என்றார். (மந்திரிமுகம் மாறிவிட்டது அடபாவி வேண்டாம் என்றுவிட்டானே, இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுக் உள்ளே குழம்பத்தில் நிற்க) கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூரினார். அதற்கும் அந்த சன்யாசி ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் வேண்டாம் என்றார். ஆனால் கடைசியாக, மந்திரி நல்லவரல்ல. அவருக்கு மரணதண்டனை விதித்துவிடுங்கள் என்று, சன்யாசி வேடத்தில் இருந்த திருடன் ராஜாவிடம் கூறினான். அதனை ராஜா நிறைவேற்றிவிட்டார். எத்தனையோ வசதி வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் ஏற்காமல், தனது திருட்டு குற்றத்தை அறிந்தவர் உயிரோடு இருக்கக் கூடாது, தான் என்றுமே குற்றவாளியாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என, சந்நியாசி வேடத்திலிருந்த திருடன் முடிவெடுத்தான். எனவே, திருடர்கள் சகவாகம் என்றுமே கூடாது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
செவ்வாய், 22 ஜூலை, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
-
EN : In the hyper-accelerated landscape of 2026, our visual intuition has undergone a radical recalibration. We now inhabit a "post-t...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக