CONTD. அப்படியே ஒரு புதிய திறன் நிறைந்த ஒரு ஆர்டிஸ்ட் மீடியாவில் சேர்ந்தாலும் ஒரு ப்ராஜெக்ட்க்கு மேலே அவன் பண்ண கூடாது என்று வார்னிங் கொடுத்து மிரட்டுவார்கள்.
இவ்வாறு புதிதாக வந்துள்ள அந்த இளைஞருக்கு திறமை என்பது இருந்தாலும் வாய்ப்பு வரும் எல்லா இடங்களையும் அடைத்து தட்டி விடுவார்கள். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அந்த இளைஞனால் இந்த நெட்வொர்க் ஆட்களை உடைக்க முடியாது.
பணக்கார குடும்பங்களுக்கு என்ன பயம் என்றால் வாய்ப்பு கொடுத்தால் அந்த இளைஞன் வளர்ச்சி அடைந்து ஜெயித்து விடுவானே ! பின்னாட்களில் நம்முடைய கேரியர் போய்விடுமே. நம்முடைய சம்பளம் போய்விடுமே. நம்முடைய குடும்பத்தின் சம்பளம் யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்காக அல்ல என்ற ஒரு திமிர் பேச்சு பேசிக்கொண்டு பொறாமை காரணமாக அந்த புதிய இளைஞருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் வேண்டுமென்றே தட்டி விடுவார்கள்.
இதுவே ஒரு புதிய நடிகர். எந்தவிதமான சப்போர்ட்டும் இல்லாமல் ஒரு படத்தை நடித்தால் அந்த படத்தை வெளியிட முயற்சி பண்ணும்போது தயாரிப்பாளருக்கு தேவையில்லாத அழுத்தம் கொடுப்பார்கள்.
தயாரிப்பாளர் அந்த படத்தை வெளியிடுவதற்கு பதிலாக கொடுக்கும் டார்ச்சரில் அந்த படத்தை கடைசியில் வெளியிடாமல் போகவேண்டும். தயாரிப்பாளர் பணக்காரன் பேச்சை மதிக்காமல் போனதால் அதிக அளவுக்கு கஷ்டப்பட வேண்டும். மண்டையை உடைக்கும் அளவுக்கு யோசிக்க கூடிய அளவுக்கு செல்லும் எல்லா இடங்களிலும் ஆட்களை வைத்து அவமானம் செய்து தொந்தரவு கொடுப்பார்கள்.
இது போல புதிய நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய தயாரிப்பாளர்களுக்கு பிளாக் லிஸ்ட் செய்து அதிகமாக சப்போர்ட் கிடைக்காத அளவுக்கு சினிமாவில் பண்ணி விடுவார்கள்.
இந்த நெப்போட்டிஸம் புதிய ஆட்களுடைய வளர்ச்சியை தடுக்கிறது. யாருமே புதிய கருத்துக்களை சொல்ல கூடாது. மக்களுக்கு தேவைப்படக்கூடிய பழைய கருத்துக்கள் மட்டுமேதான் திரும்ப திரும்ப மக்கள் கேட்க வேண்டும் என்று ஒரு விதமான மட்டமான கலாச்சாரத்தை இந்த நெப்போட்டிஸம் ஊக்குவிக்கிறது.
இந்த நெப்போடிஸம் வகையில் பணக்கார குடும்பங்கள் வளர்த்த பையன்கள் காசுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாமல் மிகவும் சந்தோஷமாக நிறைய காசு செலவழித்து வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் போன்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது.
பணத்தில் குளிக்கும் இவர்கள் தங்களுக்கென்று ஒரு பெரிய பட்ஜெட் ப்ராஜெக்ட்டை வைத்துக் கொள்வார்கள். அந்த ப்ராஜெக்ட் என்னதான் உருப்படாத ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும் நிறைய காசு கொடுத்து சிறப்பாக மார்கெட்டிங்செய்து போட்டி போடுவார்கள்.
இவர்களுக்கு போட்டியாக யாராவது புதிய ப்ராஜெக்ட் ஆக பண்ணி அந்த ப்ராஜெக்ட் எந்த அளவுக்கு நல்லதாக இருந்தாலும் அந்த நல்ல ப்ராஜெக்ட் தூக்கி எறிந்துவிட்டு இந்த கேவலமான பணக்கார வாசம் வீசும் ப்ராஜக்ட்டை நீங்கள் ஜெயிக்க வைத்து விடுங்கள் என்று மக்களை கட்டாயப்படுத்தி கடைசியில் போலி கணக்குகள் கொண்டு விடுவார்கள். மக்கள் எண்களை மட்டும்தான் நம்புவார்கள் - உண்மையான வெற்றிகளை நம்ப மாட்டார்கள். BOX OFFICE -ல் இஷ்டத்துக்கு ஒரு நம்பர் அடித்து நெப்போ ஆட்கள் வெற்றிநடை போடுகிறது என்று கணக்கு காட்டிவிடுவார்கள். மக்களும் இந்த மூளை சலவைக்கு அடிமையாக மாறிவிடுவார்கள்.
இந்த மாதிரியான எடக்கு முடக்கான வேலையை செய்து சினிமாவில் பெரிய ஆளாக மாறி நெப்போட்டிஸம் குடும்பமாக இருப்பவர்கள் தாங்களும் முன்னேற மாட்டார்கள். அடுத்தவர்களையும் முன்னேற விடமாட்டார்கள். இவர்களுடைய படங்கள் எல்லாமே வெறும் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றக்கூடிய பண சதித்திட்டங்களாக மட்டும் தான் இருக்கப்போகிறது என்பதை தவிர்த்து இவர்களுடைய படங்களில் கதை, திரைக்கதை என்று எதுவுமே இருக்காது.
மக்களுக்கு எந்தெந்த விஷயங்கள் மசாலா என்ற வகையில் கொட்டிக் கொட்டி சலிக்கப்பட்டு இருக்கிறதோ அதே விஷயங்கள் தான் மறுபடியும் மக்களுடைய தலையில் கொட்டப்படும். இந்த பிரச்சனை நேரடியாக என்று இல்லாமல் மறைமுகமாகவும், நிறைய இடங்களில் மற்றவர்களுடைய வளர்ச்சியை தடுக்கிறது. இது கொஞ்சம் பெரிய கான்செப்ட்தான். இன்னொரு போஸ்ட்டில் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறேன். இந்த வலைப்பூவை சப்ஸ்கிரைப் செய்வதற்கு மிகவும் நன்றி.
No comments:
Post a Comment