Wednesday, July 23, 2025

ARC-G2-041

 


ஒரு குரு வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக, மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப் பெண், எல்லாருக்கும் வரவேற்பு பானமாக. விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார். இப்போது குருவின் முறை வந்தது. அவரிடமும் பணிப் பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். பணிப் பெண், " ஐயா, எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார். மதகுரு, "அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் " என்றார். பணிப்பெண் விடவில்லை. உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள் " என்றார். அப்போதும் மதகுரு ஏற்றுக் கொள்ளவில்லை. பணிப் பெண் கடைசியாகச் சொன்னார், “இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன். குரு சொன்னார், " அம்மா, நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள் " அவர் அப்படிச் சொன்னதும் பணிப் பெண் ஆடிப்போனார். "ஐயோ, பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்? இதை, அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே. இத்தனை உயிர்கள் பறிபோகுமே " என்று பதறினார். குரு சொன்னார், “சகோதரி, வாழ்க்கையும் இப்படிப் பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால் புத்தி தடுமாறி விபத்து நேரிடும்

No comments:

ARC-G2-053

   ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...