ஒருவர் ஒரு பாறையை பிளக்கப் பார்க்கிறார். 500 அடிகள் சம்மட்டியால் அடிக்கிறார். அவரால் பாறையை பிளக்க முடியவில்லை. அவருடைய தலைமுறைக்குப்பின், அவருடைய மகன் 499 அடிகள் அடிகள் அடிக்கிறார். அவராலும் பாறையை பிளக்க முடியவில்லை. அவருடைய காலத்திற்கு பின்பு, அவருடைய மகன் ஒரே ஒரு அடி மட்டும் பாறையைப் பார்த்து அடிக்கிறார். உடனே, பாறை இரண்டாக பிளக்கிறது. இப்போது, பேரன் பாறையைப் பிளப்பதைப் பார்த்த ஒரு வழிபோக்கர், பின்வருமாறு கூறுகிறார். “இந்த மனிதனைப் பாரு சுலபமாக பாறைய உடைச்சுட்டான். நாமளும் நம்ம கிட்ட இருக்கற பாறை உடைக்க, போராடிகிட்டு இருக்கோம். உடைக்க முடியல. இந்த மனுஷனுக்கு எல்லாம் சுலபமாக நடக்கிறது” அந்தப் பேரன் பாறையை ஒரே அடியில் பிளப்பதற்கு, அவனது முன்னோர்கள் அடித்த 999 அடிகளும் காரணம் என்பதை அந்த வழிபோக்கர் அறியாதபடியால், பேரனுக்கு எளிமையாக விஷயம் நடக்கிறது என்று எண்ணுகிறார். ஒரு மாங்கொட்டையை விதைக்கிறோம். அது மாமரமான பின்பு, நூற்றுக்கணக்கான பழங்களைக் கொடுக்கிறது. தாத்தா ஏற்படுத்திய மாந்தோப்பின் பழங்களை, மகன், பேரன்கள் அறுவடை செய்கின்றனர். ஒரு மாங்கொட்டைதான் வினை. ஆனால், வினையின் விளைவானது பன்மடங்கு. எனவே, நல்வினை, தீவினைகளின் பலன்களும் அதைப் போலவே, பன்மடங்கு பெருகி வரும். எனவே, ஒருவன் மற்றும் அவனது முன்னோர்கள் செய்த நல்வினையின் காரணமாக, அவனுக்கு பல விடயங்கள் எளிதாக நடக்கலாம். பலர் மிகவும் கஷ்டப்பட்டு செய்யும் ஒரு காரியம், அவனுக்கு மிக எளிதாக நிறைவேறலாம்.
No comments:
Post a Comment