அந்தக் காலத்தில் ஒரு பிரபலமான ஜோசியர் இருந்தாறாம். அவர் இறந்தவர்களின் மண்டை ஓட்டை பார்த்து இதற்கு முன் அவர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்திருந்தார்கள்? அவர்கள் செய்த வினையின் முழு பயனையும் அனுபவித்து முடித்து விட்டார்களா? அவர்கள் சென்றது சொர்க்கமா? நரகமா? என்பது போன்ற பலாபலன்களையும் கணித்து விடுவாராம். பலனும் சொல்லி விடுவாராம். அவருக்கு அத்தனை திறமை இருந்தும்_தன்னுடைய கணிப்பு சரிதானா என்பதை சோதிக்க நினைத்து, "உலக்கையால் அடிப்படுவது என்ற விதி" இன்னும் மீதம் இருக்கிறது என்ற ஒரு மண்டை ஓட்டை பார்த்து தெரிந்து கொண்டு, அதை சோதித்துப் பார்க்க நினைத்து தனது வீட்டு தோட்டத்து குடிசையில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்து தினமும் கண்காணித்து வந்தாராம். இவர் அடிக்கடி தோட்டத்து குடிசைக்கு போவதும் வருவதுமாய் இருப்பதை இவர் மனைவி கவனித்து, ஒரு நாள் இவருக்கு பின்னே அவரும் சென்று-குடிசை ஓலையின் மறைவில் நின்று கொண்டு இவர் என்னதான் செய்கிறார் என்பதை அவர் கவனித்தாராம். அப்போது இந்த ஜோசியர் அந்த மண்டை ஓட்டில் எழுதி இருப்பதை கவனித்துக் கொண்டு இருக்கையிலே_அவர் மனைவியோ.ஓ… இதுதான் இவருடைய முன்னாள் காதலியின் மண்டை ஓடா? அவள் இறந்ததற்குப் பின்னும் அவள் நினைவாகத்தான் இதை இங்கே பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறாரா? என்று நினைத்துக் கொண்டு, இருடி என் சக்களத்தி-உன்னத்தான் அடிக்க முடியல இப்ப இந்த மண்டை ஓட்டை என்ன பண்றேன்னு பாரு? என்று கூறி வீட்டிற்கு சென்று உலக்கையை எடுத்து வந்து அந்த மண்டை ஓட்டை அடித்து நொறுக்கினாறாம். கர்மா என்பது இப்படித்தான் இருக்கும். செத்தாலும் அது விடாது! கஷ்டத்திலும் பிற உயிர்களுக்கு நம்மால் இயன்ற உபகரமாய் நடந்து கொள்கிறோமா? அல்லது தர்மம், தியாகம், கருணை, சகிப்புத்தன்மை, பொறுமை, போன்றவைகளை கடைப்பிடிக்கிறோமா என்றால் அதன் மூலம் கர்மா என்பதுகுறைந்து புண்ணியம்-என்பது வளர்கிறது. செய்த பாவத்திலிருந்து விமோசனம் பெற இதுவே சிறந்த வழி. இதுவே கர்மாவில் இருந்து தப்பிப்பதற்கான உபாயமும் கூட!
No comments:
Post a Comment