Friday, July 25, 2025

GENERAL TALKS - வெறுப்பை வளர்ப்பது சரியானதா ?

 



நிறைய நேரங்களில் நான் இந்த உலகத்தில் கவனிக்க கூடிய ஒரு முரணான விஷயம் என்னவென்றால் யாரெல்லாம் அன்புடைய பாதியை தேர்ந்தெடுக்கிறார்களோ அன்பின் வழியில் நடக்க வேண்டும் என்கிறார்களோ அவர்கள் எல்லோருமே காலத்தால் தண்டனைதான் கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அன்பு என்பது மிகவும் சரியாக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. ஆனால் அன்பு இங்கே சரியான நேரத்தில் சரியான மனிதர்களுக்கு கிடைக்கிறதா ? என்பதை சொல்லவே முடியவில்லை. 

நிறைய பேர் இந்த உலகத்தில் தங்களுக்கு தாங்களே ஒரு மிகப்பெரிய கெட்டியான இரும்பு சுவரை கட்டிக்கொண்டு தெரிந்துதான் இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சண்டையிட்டு தாக்க வேண்டுமென்று தான்.மனதுக்குள்ளேயே நிறைய விருப்பு வெறுப்புகளையும், கற்பனைகளையும் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு தேதிக்கு கூட நிறைய மக்கள் ஒரு காமனான இணைய தளத்தில் இணைக்கப்பட்டு. ஒருவருக்கொருவர் சண்டையிடுவது போன்று உருவாகக்கூடிய பேட்டில் ராயல் என்ற விளையாட்டுக்கள் இப்போது வரையில் ட்ரெண்டிங்கில் இருப்பதற்கு காரணமும் இந்த வகையான ஒரு வெறுப்புணர்வு தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு போட்டியிடுகிறான். 

ஆனால் அந்த போட்டியில்.இன்னொரு மனிதன் அவனுக்கு இருக்கும் பண பலம், அதிகார பலம் மற்றும் யோசனைகளின் பலத்தைக் கொண்டு உடனடியாக ஜெயித்து விடுவதையும் இவனுக்கு என்னதான் கஷ்டப்பட்டாலும் சூழ்நிலைகளின் காரணமாக தோல்விகள் மட்டுமேதான் உருவாவதையும் இவனால் சரியாக அக்சப்ட் பண்ணிக் கொள்ள முடிவதில்லை.

கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் சரியாக அன்பு செலுத்துபவர்களுக்கு ஒரு முன்னேற்றத்தையே காலம் என்பது கொடுக்காமல் இருக்கிறது. இதுபோன்ற அன்பே செலுத்தாமல் வெறுப்பை மட்டும் செலுத்தி கொண்டிருப்பவர்கள் அனைவரையும் தொடர்ந்து முன்னேற வைத்துக் கொண்டே இருந்தால் இந்த உலகம் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பதுதான் கேள்விக்குறி.

வெறுப்பை வைத்துக் கொண்டு அரசியல் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால் அன்பை வைத்துக்கொண்டு வளர்ச்சியை நாம் அடையலாம். வளர்ச்சியை அடையாமல் வெறும் அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு இவர்கள் அதிகாரமுள்ளவர்கள் என்றும் இவர்கள் அடிமையாக வாழ வேண்டியவர்கள் என்றும் மனிதர்களை பிரித்து பார்த்து வைப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

No comments:

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 10

https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-en-uyire-en-kanave-en-anbe.html https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-muthamiz...