பொதுவாக வலைப் பூக்கள் என்றாலே நிறைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு கருவியாக மட்டுமே இருந்து வந்து இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் குறிப்பாக கொரோனாவுக்கு அடுத்ததாக நடக்கக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் யாருக்குமே வலைப்பூவில் பதிவு பண்ணு வதற்காக அதிகமாக நேரமே கிடைப்பதில்லை.ஆனால் எப்பொழுதுமே எழுத்துப்பூர்வமாக பதிவு பண்ணப்பட்ட பதிவுகள் தான் அந்த நாட்களில் அந்த காலகட்டத்தில் எப்படி மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக அமையும்.
இதனால் தான் இப்பொழுது இந்த காலம் இணைய காலம் என்ற இந்த சிறப்பு பகுதி நம்முடைய வலைப்பூவில் இணைந்துள்ளது. இந்த சிறப்பு பகுதியின் நோக்கம் நிறைய கதைகளை பேசுவதோ, கட்டுரைகளை ஆராய உதவு கிடையாது. இந்த காலத்தில் குறிப்பிட்ட இந்த 2020 - 2030 வரையிலான வருட காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழப் போகிறார்கள் என்பதையும்.இந்த காலத்தில் டெக்னாலஜி எப்படி உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதையும் நான் பகிரக்கூடிய கருத்துக்களாக மட்டுமே இந்த பகுதிகளில் நான் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்தில், ஒருவர் தனது வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்தோ அல்லது எதிர்மறை சமநிலையில் இருந்தோ தொடங்கி, உயர்ந்த நிலைக்கு வருவது ஒரு பெரிய விஷயம். என் வாழ்க்கையில் இதுபோன்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்கள் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்தே தொடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை கடன்கள் நிறைந்த ஒரு நிலையில் இருந்து தொடங்குகிறார்கள்.
ஒரு நடிகர் முன்னேறுவதற்கு ஒரு சில நேரங்களில் அதிர்ஷ்டம் என்பது தேவை. ஆனால் ஒரு சராசரி மனிதன் தொழில் துறையில் முன்னேறுவதற்கு நிறைய பணம் மட்டும் தான் தேவை. இந்த நிறைய பணத்தை சம்பாதிப்பதற்காக ஒரு சராசரி மனிதன் பட கூடிய கஷ்டத்தை யாருமே படவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அதிகமான கஷ்டப்பட்ட ஒரு சராசரி மனிதன் கடைசியில் மேலே வருவது என்பது மிகவும் சிறப்பான விஷயம்.உண்மைய சொல்ல போனால் அதனை விடவும் மிகவும் தரமான சம்பவம் என்று இந்த உலகத்தில் வேறு எதுவுமே சொல்ல முடியாது. இது போன்ற அதிர்ஷ்டத்தை நம்ப கடினமான உழைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு மேலே வந்த மக்களை கண்டிப்பாக சூரரைப் போற்று என்பது போல கௌரவப்படுத்த வேண்டும் என்பதுதான் சரியான கருத்து.
No comments:
Post a Comment