இப்போது எல்லாம் ஒரிஜினல் எழுதவே மனம் இருக்கமாட்டேன் என்கிறது, ஒரிஜினல் என்பது நேரத்தை செலவு செய்யும் ஒரு விஷயம் என்றே கருதுகிறார்கள், இன்னொரு பக்கம் கம்ப்யூட்டர்களின் வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்ட அசுர வளர்ச்சியாக இருக்கிறது. நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றியுள்ள விஷயங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும், சரி, இப்போது இந்த படத்தின் கருத்து பகிர்வுக்கு வரலாம் - UI - ஒரு தரமான மாஸ் நிறைந்த கமேர்சியல் திரைப்படம் - இருந்தாலும் இந்த படம் 50 க்கு 50 என்று தனியாக மக்களை பிரிக்கும் படம் என்றே சொல்லலாம், சாதி, மதம், அரசியல், வறுமை, கார்ப்பரேட் என்று அநேக பிரச்சனைகளை இந்த படம் நேருக்கு நேராக அடித்து நொறுக்கி இருக்கிறது என்றால் மிகையாகாது, எல்லோருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது, இந்த படத்தை சினிமாவை வேறு ஒரு பரிமாணத்தில் நேசிக்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், இது நான் இந்த வருடத்தில் பார்த்ததில் மிக பிரமாதமான கமெர்ஷியல் திரைப்படம், நிறைய சமூக பிரச்சனைகளை இந்த படம் பேசினாலும் யாரையுமே காயப்படுத்தாத இந்த படத்தின் திரைக்கதை இந்த படத்துக்காக நடிகர் உபேந்திரா எவ்வளவு மெனக்கெட்டு சமூக அக்கறையோடு எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. மக்களை ஒரு சிஸ்டம் தவறாக வழிநடத்துகிறது என்றால் அந்த சிஸ்டம் என்பதை மாற்றவேண்டும் என்பதுதான் இந்த படத்தின் சுருக்கமான கருத்து, மற்றபடி 85/100 என்ற ரேட்டிங் கொடுக்கும் அளவுக்கு தரமான படம். ஒரு சில காட்சிகள் நேரடி எதிர்ப்பு உருவாகும் என்பதால் மாற்றப்படலாம் இருந்தாலும் படத்தின் கதையின் சாரம்சம் மாறவில்லை என்பதால் படம் நன்றாக உள்ளது. காமிரா வொர்க் மற்றும் கலர் கிரேடிங்குக்கும் ஆர்ட் டெபார்ட்மென்ட்கும் மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ள வேண்டும். கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது.
No comments:
Post a Comment