Wednesday, July 16, 2025

ARC-G2-022

 



ஒரு துறவியிடம், ஒரு வாலிபன் பயில வந்தான். பல ஆண்டுகளாக அவரிடம் இருந்தான், ஆனால் அவனுக்கு “எப்படி இந்த துறவி மட்டும் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கிறார்” என்று புரிபடவில்லை. பல தடவை அது பற்றி கேட்டும், அவன் ஆசான் மெதுவாக புரியும் என்று மழுப்பி விட்டார். ஒரு நாள், அவன் ஆசானிடம் சென்று, வணங்கி கண்ணீர் சிந்தினான். "குருவே, நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கும் நிலையை எனக்கும் அருள வேண்டும், நான் எவ்வளவோ முயன்றும் எனக்கு அந்த நிலை கிட்டவில்லையே" என்று அழுது கெஞ்சினான். அந்த துறவி, இது தான் தக்க தருணம் என்று, "என்னுடன் வா" என்று அவனை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்து சென்றார். அங்கே ஒரு பெரிய மூட்டையில் சில சிறிய கற்களால் நிரப்பினார். அந்த மூட்டையை அந்த மாணவனை சுமந்து அந்த மலையை ஏற சொன்னார். அவனும், மூட்டையை முதுகில் சுமந்து ஏற தொடங்கினான். ஏற முடிந்தது, இது என்ன பெரிய விஷயம் என்று ஏறினான். சிறிது நேரம் சென்றபின், அந்த மூட்டையில் இன்னும் சில பெரிய கற்களை சேர்த்தார். இப்படி இரண்டு மூன்று தடவை செய்தார். சிறிது தூரம் சென்ற பின், அவன், துறவியிடம், "முடியவில்லை குருவே!" என்று வேண்டினான். மூட்டை மிகவும் கனக்கிறது, எப்படி ஏறுவது என்று புலம்பினான். துறவி, மூட்டையில் இருந்த சிறு கற்களை அகற்றினார். மேலே ஏற ஏற அவனால் முடியவில்லை. அழுதான், அங்கேயே உட்கார்ந்து விட்டான். துறவி கனிவுடன், இப்பொழுது இந்த மூட்டையை இங்கேயே துறந்து விடு என்றார். அவன் ஆனந்தமாக அதை விட்டு விட்டான், மலையேற சுலபமாக இருந்தது. சிறிது நேரத்தில் மலை உச்சியை அடைந்தார்கள். அந்த வாலிபன், "எனக்கு வாழ்க்கையின் சாரத்தை உணத்தியர்தற்காக மிக்க நன்றி" என்று வணங்கினான். அந்த கற்கள் தாம் நாம் சுமக்கும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தோமானால் வாழ்க்கை ஒரு உன்னத பயணம்.

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...