இதுவரையில் ஜான் விக் என்ற திரைப்பட வரிசையில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய சூப்பர் ஹிட்டாக இருந்திருக்கிறது. இதற்கு காரணம் ஜான் விக் படங்களில் இருக்க கூடிய துல்லியமான சண்டைக் காட்சிகளும் வேகமான திரைக்கதையை நகர்த்துவதும் தான்.
அந்த விஷயத்தை மிகவும் சரியாக புரிந்து கொண்டு அந்த படங்களின் வரிசைக்கு கௌரவமாக சேர்க்கப்பட்ட ஒரு படம் தான் இந்த பாலேரினா என்ற இந்தத் திரைப்படம்.
அனே டி ஆர்மாஸ் என்ற நடிகை அவர்களுடைய வாழக்கயில் மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஆக எடுத்துக் கொண்ட படத்தை கொஞ்சமும் குறைவைக்காமல் நடித்துக் கொடுத்து இருக்கிறார். ஒரு ஆக்ஷன் அதிகாரமாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தையே கதை : தன்னுடைய சிறிய வயதிலிருந்தே ஒரு வில்லன் கூட்டத்தை பழி வாங்கியே ஆக வேண்டும் என்ற கடினமான வாழ்க்கையின் நோக்கத்துடன் இருக்கக்கூடிய நம்முடைய கதாநாயகி ஒரு கட்டத்தில் அந்த வில்லன் கூட்டத்தில் இருந்து கதாநாயகிக்கு எதிராக ஒரு பலமான தாக்குதல் நேரும்போது.மறுபடியும் இந்த விஷயத்தை நடக்க விடாமல் செய்ய நேருக்கு நேராக சண்டை போடுவது தான் சரியான செயல் என்று ஒரு தனி மனுஷியாக.தன்னிடம் இருக்கும் மொத்த திறனையும் கொண்டு அந்த வில்லன் கூட்டத்தின் இடத்துக்கே சென்று சண்டை போடுவது தான் இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளது.
இந்த படத்துடைய சண்டை காட்சிகளுக்காக மட்டும் இந்த படத்தை நீங்கள் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் என்ற அளவுக்கு சண்டை காட்சிகளில் அவ்வளவு மெனக்கிட்டு ஸ்டண்ட்களில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய வாழ்நாளில் ஒரு முறை பார்க்க வேண்டும்.
நீங்களே ஆக்ஷன் படங்களின் ரசனை உள்ளவராக இருந்தால் இந்த படம் உங்களுடைய பிடித்தமான படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்பதை.உறுதியாக சொல்கிறேன்.
No comments:
Post a Comment