இது போல மிதமிஞ்சிய யோசனைகள் என்பது இருக்கும்போது புத்திசாலிகள் தங்களுக்கு திறந்து வைத்திருக்கக்கூடிய தகவல்களையுமே வந்து மிகவுமே அதிகமாகத்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். இப்படி மிகவுமே அதிகமான தகவல்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்னும் போது அவர்களுடைய யோசனையுமே அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும் என்ற மாதிரியான ஒரு மனநிலையை கொடுத்து விடும்.
பொதுவாக புத்திசாலித்தனமாக இல்லாதவர்கள் தங்களுடைய அனுபவ அறிவை நம்பி ஒரு ரிஸ்கை எடுக்க வேண்டும் என்றால் யோசிக்காமல் எடுத்துவிடுவார்கள். அதுவே ஒரு சில நேரங்களில் கை கொடுக்கும் அந்த ரிஸ்க்க்கு தேவைப்படக்கூடிய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் போன்றவைகளை ரிஸ்க்கை எடுத்து எடுத்து அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தையும் அதன் மூலமாக கிடைக்கும் நண்பர்களையும் கொண்டு கற்றுக் கொள்வார்கள்.
ஆனால் புத்திசாலித்தனமாக இருப்பவர்கள் ரிஸ்க்கை எடுக்கக் கூடாது என்று போன்ற ஒரு மாதிரியான மனநிலையில் இருப்பார்கள். இந்த மனநிலை தான் பின்னாட்களில் அவர்களுக்கு பிரச்சனையாக வந்து தொலைத்துவிடுகிறது.
இந்த வகையில் இன்னொரு கட்டமும் இருக்கிறது. தங்களை புத்திசாலிகள் என்று காட்டிக் கொள்வார்கள் ஒரு சில பேர்கள். ஆனால் அவர்கள் நிஜமான புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் முழுமையான விஷயத்தில் கொஞ்சம் அளவுக்குதான் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்பொழுதுமே முழுமையான அளவுக்கு தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள் !
அவர்கள் நினைத்தாலும் அவர்களால் முழுமையான அளவுக்கு தெரிந்து கொள்ள முடியாது. அதற்கான போதுமான நேரமும், பக்குவமும் அவர்களிடம் இருக்காது. இப்படிப்பட்டவர்களிடம் இருக்கக்கூடிய பயமும் நிஜமான புத்திசாலிகள் இடம் இருக்கக்கூடிய பயமும், மாறுபட்ட கான்செப்டுகள்.
No comments:
Post a Comment