Thursday, July 24, 2025

ARC-G2-061

 


தொழிலதிபர் ஒருவருக்கு பாராட்டு விழா நடக்கின்றது. அதற்கான விழாவில் விருதை பெற்ற அந்த தொழிலதிபர் உரையாற்றுகின்றார். அவரது உரையின் இறுதியில் அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் அவரிடம் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு தரப்படுகின்றது, “யாராவது என்னை கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?” என்று கேட்கிறார். ஒரு மனிதர் எழுந்து “உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு அந்த மனிதரைப் பார்த்து “இவ்வளவு கீழ்த்தரமான சாதாரணமான உடை அணிந்திருக்கின்ற உங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என அவரை அவமானப்படுத்துகின்றார். அவமானத்தோடு அந்த மனிதர் தலை குனிந்து உட்கார்ந்து கொள்கின்றார். மீண்டுமாக “உங்களில் யாராவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?” என்று தொழிலதிபர் கேட்கின்றார். ஒருவர் அவமானத்தை கண்டவுடன் எவருக்கும் எழுந்து அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை. இறுதியாக ஒரு மனிதர் எழுந்து நிற்கின்றார். இதற்கு முன் கேள்வி கேட்ட அந்த மனிதரை விட இவர் சாதாரண உடை அணிந்திருக்கிறார். காலில் செருப்பு கூட இல்லை அதே கேள்வியை மீண்டும் கேட்கின்றார்.” உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?” இப்போழுது தொழிலதிபர் அந்த மனிதரை பார்க்கின்றார். அவரை மேடைக்கு அழைத்து கட்டித்தழுவி அவரிடம் “நீங்கள் நிச்சயம் என்னை போல உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்” என்று கூறுகின்றார். “இப்போது உங்கள் முன் நான் செய்தது எல்லாம் ஒரு டெஸ்ட் என்று கூறுகின்றார். என்னுடைய வாழ்க்கையில் நானும் பல அவமானங்களையும் மற்றும் துன்பங்களையும் சந்தித்தேன். ஆனால் அவரைப் போல நான் உட்காரவில்லை இவரை போல எழுந்து நின்றேன்”.

No comments:

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 10

https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-en-uyire-en-kanave-en-anbe.html https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-muthamiz...