Thursday, July 24, 2025

STORY TALKS - வினையின் பலன்களை அனுபவிக்க வேண்டும் !

 ஓர் அழகிய பள்ளி அது. எட்டாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். “என்ன பிள்ளைகளா, சில நாட்களுக்கு முன்னால நம்ம பள்ளித் தோட்டத்தில விதை விதைச்சீங்களே, தினமும் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வர்றீங்களா?” “ஆமாம் சார், தினமும் தண்ணி ஊற்றி நல்லா கவனிச்சிட்டு வர்றோம் சார்” “சரி, அப்படின்னா அந்தச் செடிகள் எல்லாம் எப்படி வளர்ந்திருக்குன்னு இப்போ போய் பார்த்திட்டு வரலாமா?” “சரிங்க சார்” ஒரு மாணவனை பார்த்து “நீ என்ன விதை விதைச்ச?” “கத்தரி விதை சார்” “சரி, மத்தவங்க என்ன விதை விதைச்சீங்கன்னு சொல்லுங்க” தக்காளி, அவரை, பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், வெண்டை, பாகல், புடலை, முள்ளங்கி, பீன்ஸ், அரைக்கீரை என்று ஒவ்வொரு மாணவரும் அவர்கள் விதைத்ததைச் சொன்னார்கள். “சரி, இப்ப உங்க செடி, கொடிகள் எப்படி வளர்ந்திருக்குன்னு பாருங்க” எல்லாச் செடி, கொடிகளும் மிக அழகாக வளர்ந்து வருவதைப் பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மாணவனை பார்த்து “நீ விதைச்ச கத்தரி விதையில இருந்துதானே இந்த தக்காளிச் செடி முளைச்சது ?” அந்த மாணவன் சிரித்துக்கொண்டே, “என்ன சார், என்னை சோதிச்சுப் பார்க்கணும்னுதானே இப்படிக் கேக்கறீங்க, அது எப்படி சார் கத்தரி விதையில இருந்து தக்காளிச் செடி முளைக்கும்? என்ன விதை விதைக்கறோமோ அந்தச் செடிதான் சார் முளைக்கும்” “என்ன பிள்ளைகளா, இந்த பையன் சொல்வது சரிதானா?” “ஆமாம் சார், என்ன விதை விதைக்கறோமோ அந்த விதையிலிருந்து அதற்குரிய செடிதான் முளைக்கும் சார்” “உண்மைதான் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். அதுபோல நம்முடைய மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை விதைக்கிறோமோ அவைதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது மனதில் நல்ல எண்ணங்களை வைத்திருந்தால் நல்லவற்றை அறுவடை செய்யலாம். மாறாக, கெட்ட எண்ணங்களை வைத்திருந்தால் கெட்டவையே நமக்குக் கிடைக்கும். இதனை இன்னொரு வகையிலும் சொல்லலாம், யாராலுமே கடந்த காலத்தை மாற்ற முடியாது. நாம் விருப்பபட்ட வெளியீட்டை எடுக்கவேண்டும் என்றால் விதைக்கபடும் வகையே மாற்ற வேண்டும், அப்படி தவறு என்று ஏதேனும் விதைக்கப்பட்டால் நேரடியாக அறுவடை வரை காத்திரிந்து செய்துவிட்டு பின்னால் சரியான விதைகளை விதைக்க வேண்டும் !

No comments:

SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.4 - சரியான விஷயங்களை சரியான ஆட்களிடம் சரியான நேரத்தில் சரியாக கேட்க வேண்டும்.

இந்த விதி எப்படி வேலை செய்கிறது என்றால் நீங்கள் ஒரு விஷயத்தை கேட்கிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை எதற்காக கேட்கிறீர்கள் என்பதை ஒரு சிறப்பான ப...