இந்த விதி எப்படி வேலை செய்கிறது என்றால் நீங்கள் ஒரு விஷயத்தை கேட்கிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை எதற்காக கேட்கிறீர்கள் என்பதை ஒரு சிறப்பான பிரசன்டேஷன் போல அமைத்து ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியிடம் இன்வெஸ்ட்மென்ட் கேட்பதை போல நீங்கள் கேட்க வேண்டும்.
அதுவுமே சரியான நேரத்தில் சரியான ஆட்களிடம் மட்டும் தான் கேட்க வேண்டும். நீங்கள் சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள். இருந்தாலும் தவறான ஆட்களிடம் தான் நீங்கள் எப்படியாவது மாட்டிக் கொள்வீர்கள்.
பொருளாதார நெருக்கடி அல்லது நேரமில்லாத நெருக்கடி போன்ற விஷயங்களில் இன்னொரு மனிதர் சிக்கிக் கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் ஒருவருடம் தேவைப்படும் விஷயத்தை நாம் எப்பொழுதுமே கேட்க கூடாது.
உங்களுக்கு ஒரு பொருள் வேண்டுமென்றால் அதனை முடிந்தவரையில் நீங்கள் சம்பாதித்த சம்பாத்தியத்தில் வாங்குவது சரியான செயல். ஆனால் இந்த வகையில் இப்பொழுதுமே எல்லாமே சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது.
ஒரு சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களுடைய உதவியால் கிடைக்கக்கூடிய பொருட்களை பெற்று சரியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகலாம். இந்த வகையான பொருட்கள் மற்றவர்கள் மட்டும் தான் கிடைக்கும். நாம் நினைத்தால் கூட நம்மால் அடைய முடியாது என்ற வகையான ஒரு வாழ்நாள் நிபந்தனையை கொண்டு வந்து வைத்திருக்கும்.
உங்களுடைய வாழ்க்கை நிரந்தரமான விஷயம் கிடையாது. நீங்கள் என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் உங்களுக்காக மிஞ்சப்போவது ஆறு அடி கல்லறை அல்லது ஒரு சொம்பு சாம்பல் மட்டும்தான்.
ஒரு பொருளை நீங்கள் வாங்குவதற்காக அல்லது பயன்படுத்துவதற்கான சரியான நோக்கம் என்பது சந்தோசம் தான். அந்த சந்தோஷத்தை உங்களால் அந்த பொருளைப் பெறுவதன் மூலமாக அடைய இயலாது என்றால் அந்த பொருளை நீங்கள் பெறுவதே பயனற்றதாக கருதப்படும்.
ஒரு பொருள் உடைய உண்மையான பயன்பாடு சந்தோஷம் என்பதை நீங்கள் எப்பொழுதும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் தான் எப்பொழுதுமே அடுத்தவர்களிடமிருந்து ஒரு பொருளோ அல்லது பணமோ நீங்கள் எதிர்பார்த்தால் சந்தோஷமான நிலையில் இருக்கும் பொழுது கேட்பது மிகவும் சரியான செயல். இது ஒருவகையில் மரியாதைக்குரிய மெச்சூரிட்டியாகவும் கருதப்படுகிறது
1 comment:
Super Information ✌️
Post a Comment