இந்த தொடரை பொறுத்தவரை பழைய காலத்து டிராகுல்லா புத்தகத்தின் ஃபேண்டஸி விஷயங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு வில்லனிஸம் நிறைந்த தொடராக 3 எபிசொட்களில் கொடுத்து இருக்கிறார்கள், கவுண்ட் டிராகுல்லா ஒரு கொடூர சாத்தான், இவரை எதிர்த்து சண்டை போடும் அகாதா வேன் ஹெல்சிங் என்ற பாதிரியை, தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தாலும் கிளைமாக்ஸ் வரும்போது கதையை மொத்தமாக மாற்றி வேற பரிமாணத்தில் திரைக்கதையின் டோன் என்பதை அப்படியே தலைகீழாக கொண்டுவந்து லாஜீக் இல்லாமல் ஒரு அளவுக்கு கிளைமாக்ஸ் முடித்து இருக்கிறார்கள். பொழுது போகவில்லை ஏதேனும் கிளாசிக் என்று பார்க்கவேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கு ஒரு அளவுக்கு பயன் அளிக்கலாம், மற்றபடி ஒரு அளவு ஆவரேஜ்-ஆன தொடர்தான், ஃபேண்டஸி ரசிகர்களுக்கு கிளைமாக்ஸ் வொர்க் அவுட் ஆகலாம், ஆனால் ஜெனரலான ஆடியன்ஸ் இந்த தொடரில் நிறைய எதிர்பார்க்க முடியாது. கதாநாயகர்களுடைய நடிப்பு பிரமாதமான அளவுக்கு இருக்கிறது. இன்னும் கதையில் வொர்க் செய்து இருக்கலாம்.
No comments:
Post a Comment