இந்தப் படம் ரசிகர்களிடையே ரசனைக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்ட ஒரு கமர்சியல் படம் என்று சொன்னால் அது சரியானதாக இருக்கும். பெரிய பெரிய அரசியல் தலைவர்களுடைய சப்போர்ட்டை வைத்துக்கொண்டு உள்ளூருக்குள்ளேயே ஒரு ரவுடிசத்தை மீண்டும் செய்து கொண்டிருக்கும் நம்முடைய வில்லன்கள் இவர்களை தனியாக விசாரணை செய்து நடக்கக் கூடிய அநியாயங்களை தட்டிக் கேட்க நம்முடைய ஊருக்கு களமிறங்கும் ஒரு காவல்துறை அதிகாரி. இவரும் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக வில்லன்கள் உடைய பணக்கார வாழ்க்கையை சவால் போடாமல் சாமர்த்தியமாக பின்னணியில் இருந்து அழித்துக்கொண்டு கொண்டு நியாயத்தை நிலைநாட்டுகிறார் என்று.இந்த படத்தோட கதை வழக்கமான ஒரு கம்மேர்சியல் விஷயத்தோடு சென்று கொண்டிருந்தாலும், இன்டர்வல் என்று வரும்போது ஒரு மகத்தான ட்விஸ்ட்டை கொண்டு வந்து இந்த படத்தின் ஜேனரை மொத்தமாக மாற்றியிருக்கிறார்கள் என்றால் அதுதான் இந்தப் படத்தின் சுவாரசியத்துக்கான சரியான விஷயமாக அமைந்திருந்தது.
இந்த படத்துலயே பாடல் காட்சிகள் மேக்கிங் மற்றும் லோக்கேஷன் செக்ஷன் எப்பொழுதும் போல ஒரு சுந்தர் சி அவர்களுடைய படத்தில் இருப்பதை போல பிரமாதமாகத்தான் இருந்திருக்கிறது. மற்றபடி இந்த படத்தில் சொல்லப்பட வேண்டிய ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் வடிவேல் அவர்களுடைய கம்பேக் கொடுத்து வடிவேலு எப்பொழுதும் போல அவருடைய பார்மில் இருக்கிறார் என்று ரசிகர்களே சரியாக சொல்லும் அளவுக்கு காமெடி காட்சிகளை சூப்பராக ஸ்கோர் செய்து வலம் வருகிறார். மேலும் புது ஜெனரேஷன் நடிகர்களோடு சரியாக கலந்தும் வேலை பார்த்துக்கொண்டு ரசனையோடு இருக்கும் நடிப்பை கொடுத்தது பாராட்டுக்குரிய விஷயம். கதாநாயகியாக இருக்கும் ரெஜினா அவர்களும் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.
No comments:
Post a Comment