வியாழன், 24 ஜூலை, 2025

GENERAL TALKS - குற்றங்களை கண்டுபிடிப்பவர்கள் முன்னேற மாட்டார்கள் !

 



ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம் பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார். நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.” அவர் விக்கித்துப் போனார். சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.இது போல குறைகளை சொல்லி கொண்டிருப்பவர்களால் கடைசி வரைக்கும் முன்னேறவே முடியாது. முன்னேறினாலும் இவர்களுக்கு போட்டியாக யாருமே வரக் கூடாது என்று இவர்கள் கருதுவதால் இவர்களுடைய சுயநலம் கடைசி காலத்தில் அவர்களை அழித்துவிடும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கரண் தாபர்: உங்களின் 'இரு மொழிக் கொள்கை' என்கிற வறட்டுப் பிடிவாதத்தால், ஒன்றிய அரசின் ₹ 2000 கோடி பள்ளிக்கல்வி நிதியை அநியாயமாக இழக்கிறீர்களே?! நீங்க செய்வது சரியா?"

பழனிவேல் தியாகராஜன்:
"என்ன மாதிரியான கேள்வி இது.?
எப்படி நீங்கள் இப்படியொரு கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள்.?

ஓர் உதாரணமாக, நான் பல்லாயிரம் கோடி ₹ முதல் போட்டு நடத்துகிற என் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திக் கொண்டு வருகிறேன்.

திடீரென்று ஒரு திருடன் உள்ளே புகுந்து என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தி, 'நான் சொல்ற மாதிரி பிசினஸ் டீலிங் முடி...இல்லைன்னா... 2000 கோடி கொடு'...ன்னு சட்ட விரோதமாக என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டிக்கிட்டு நிக்கிறான்.

நீங்களோ, அந்த கிரிமினலை எந்த கேள்வியும் கேட்காமல், அவனை தடுத்து விரட்டவோ, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவோ, எந்த முயற்சியும் எடுக்காமல் அவன் மீது சிறு கோபம் கூட கொள்ளாமல் என்னிடம் வந்து,"அந்த சட்டவிரோத பிளாக்மெயில்க்கு நீங்க சம்மதிச்சா என்ன? எதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடித்து ₹2000 கோடியை வீணாய் இழக்கப் போறீங்க?"ன்னு... பிளாக்மெயிலருக்கு ஆதரவாக எனக்கு பாடம் நடத்தி கேள்வி கேட்கிறீங்களே...

இது சரியா.? நியாயமா..?

என்ற பழனிவேல் தியாகராஜனின் பதில் இணையத்தை சுற்றி வருகிறது... 💯



#படித்ததில்_பிடித்தது
#நம்_வரி #நம்_உரிமை #வேண்டாம்_மும்மொழி
#CMMKStalin

GENERAL TALKS - இந்த கட்டிடக்கலை மாற்றம் உலக அளவில் நடந்துகொண்டு இருக்கிறது !!

  நவீன காலத்தின் குறைந்தபட்ச வடிவமைப்பு (Minimalism) என்று சொல்லப்படும்  முறை, கட்டிடக்கலையை வெறும் செயல்பாட்டுக்கான பெட்டியாக மாற்றியிருப்ப...