Monday, January 1, 2024

SIMPLE TALKS - நம்ம வாழ்க்கை மேலே நிறைய குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டிய கட்டாயம் !!

 


இந்த வாழ்க்கை மேல் நிறைய குற்றச்சாட்டுகளை கண்டிப்பாக சுமத்த வேண்டும். இந்த வாழ்க்கை நிறைய விதங்களில் பாரமாக மாறுகிறது. நிறைய நேரங்களில் நமக்கு நெகட்டிவ்வான விஷயங்களை கொடுத்துவிடுகிறது. இந்த உலகத்தில் எல்லா காஸ்ட்லியான விஷயங்களுமே அந்த விஷயங்களின் அருமை தெரியாதவர்களுக்கும் பயன்பாடு தெரியாதவர்களுக்கும் கிடைக்கிறது. இமாஜின் பண்ணி பாருங்களேன். இங்கே பிரிவிலேஜ் மட்டும் இருந்துவிட்டால் எல்லோருமே மதிக்கிறார்கள். எல்லோருமே தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். போன தலைமுறை லேகஸியில் கிடைக்கும் சொத்துக்கள் இந்த தலைமுறையில் இன்னுமே சம்பாதிக்க அனுமதிக்கிறது. இங்கே எப்படி பிரச்சனைகள் நடக்கிறது என்றால் எல்லாமே கரேப்ஷனால்தான். பணம் இருப்பதால்தான் அதிகாரம் இருப்பதால் இன்னொருவருக்கு நன்மை செய்ய மனது வராமல் போகிறது. இது எல்லாமே யோசித்து பார்த்தால் இந்த பூமியில் மனித இனம் தொடங்கிய 20000 ஆண்டுகளுமே சண்டையாக மட்டும்தான் இருந்து இருக்கிறது. வன்முறை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. நிரந்தரமான அமைதி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளில் சாத்தியமானதுதான். நேரடியான மிக்கச்சரியான நிர்வாகம் மற்றும் அதிகாரம் எல்லோருக்குமே தேவைப்படுகிறது. இங்கே எல்லோருக்குமே எல்லாமே கிடைப்பது இல்லை. மோசமான மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது லஞ்சம் , கொள்ளை , பண மோசடி என்று பல பல வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். நம்ம வாழ்க்கை எப்போதுமே நல்லவர்களை உடல் அளவிலும் மனது அளவிலும் காயப்படுத்திக்கொண்டு இருக்கிறது. போதுமான பணம் இல்லாமல் கடைசி வரைக்குமே மேலே வரவே கூடாது என்ற வகையில்தான் நல்லவர்களை நடத்துகிறது. கோழையாகவும் முதுகெலும்பு இல்லாத பூச்சியாகவும் மட்டுமே நல்லவர்கள் வாழவேண்டும் என்றால் இதுதான் கடவுளின் விதி என்றால் கடவுள் பெரிய தப்பு பண்ணுகிறார். அவ்வளவுதான் சொல்ல முடியும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...