Monday, January 1, 2024

GENERAL TALKS - 01012023001 - ஒரு ஒரு நாளும் ஒரு கட்டுரை !!


 இன்னைக்கு தேதிக்கு புது வருடம் என்பதால் ரொம்ப முக்கியமான விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். நான் போன போஸ்ட்டில் சொன்னது போல இங்கே இருக்கும் மனிதர்கள் எப்போதுமே ஒருவரை ஒருவர் தாக்கதான் செய்வார்கள். யாரையுமே முழுமையான அளவுக்கு நம்ப முடியாது. இங்கே எல்லோருக்குமே ஒருவரால் இன்னொருவருக்கு தேவை இருக்கிறது என்ற கட்டாயம் இருப்பதால்தான் உயிரோடு வைத்து இருக்கிறார்கள். புதுவருஷத்தின் முதல் நாளான இன்று நான் சொல்லும் கருத்தை கேளுங்கள். உங்களுடைய உடல் நலம் , மன நலம் , பொது வாழ்க்கை இது எல்லாவற்றுக்குமே நீங்களே பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் நடக்கும் என்றால் அப்படி எல்லாம் கண்டிப்பாக நடக்காது. பெற்றோர் , சகோதர்கள் , தோழமைகள் , உடன் வேலை செய்பவர்கள் , தெரிந்தவர்கள் என்று யாரையுமே நீங்கள் நம்ப கூடாது. உங்களுடைய நிலைமை தரைக்கு சென்றால் உங்களை காயப்படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். வெற்றிகளை அடைந்தால் மட்டும்தான் உங்களுக்கு மதிப்பு இருக்கும் எப்போது நீங்கள் தோல்வி அடைகிறீர்களோ அப்போது உங்களுடைய வாழ்க்கையே நரகமாக மாறிவிடும், நீங்கள் நேசித்த நபர்கள் உங்களுக்கு புதைக்க குழியை தொண்டி தயாராக இருப்பார்கள். நல்லவர்களாக இருந்து வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள். காலத்தால் அடிவாங்கி வலித்தால் மட்டும்தான் இந்த மாதிரியான அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களால் என்னை போல வலியை தாங்க முடியாது. ஆதலால் மிகவும் கவனமாக இருங்கள். எப்போது வேண்டும் என்றாலும் யாரை வேண்டும் என்றாலும் எதிர்க்க வேண்டிய நிலைமை இருக்கிறது. இன்றைய நண்பன் நாளைய எதிரிதான். இன்றைய உறவு நாளைய பகைதான். உங்களுடைய கோபத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம். கொடியோரை தாக்க கோபமே சிறப்பான ஆயுதம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...