வெளிநாட்டு திரைப்படங்கள் , குறிப்பாக தொலைக்காட்சி நெடுந்தொடர்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்களில் விஷயம் என்னவென்றால் இரண்டு வகையான படங்கள் இருக்கிறது. CANON படங்கள் மற்றும் NON-CANON படங்கள். இங்கே CANON படங்கள் தொலைக்காட்சி தொடரின் சம்பவங்களுக்கு தொடர்ச்சியாக வரும். ஆனால் NON-CANON படங்கள் அப்படி கதைக்களத்தை சாராமல் வந்துகொண்டு இருக்கும். இந்த படம் அந்த வகையில் நேரடியாக தொடரில் இடம்பெற்ற ZYPHER என்ற கதாப்பாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கதையை நகர்த்துவதால் ONEPIECE எப்படியாவது மொத்த தொடரை பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் நல்ல ஆக்ஷன்னான படம். கதையில் ஹ்யூமர் கொஞ்சம் குறைவுதான் என்றாலும் ஒரு ஆக்ஷன் படம் போல மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள். வில்லன்கள் கதாப்பாத்திரத்தில் நல்ல பொடன்ஷியல் இருக்கிறது. கிளைமாக்ஸ் கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மெண்ட், இருந்தாலும் படமாக பார்த்தால் ஒரு பெஸ்ட் படைப்பு இந்த படம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மியூசிக் மற்றும் வசனங்கள் டெலிவேரி எல்லாமே Z என்று அன்போடு அழைக்கப்படும் நம்முடைய நெகட்டிவ் கேரக்ட்டருக்கு சப்போர்ட் பண்ணுவதால் ஒரு இன்டர்நேஷனல் ஆடியன்ஸ்ஸாக இந்த தொடரில் எதிர்பார்க்கும் ஒரு சில விஷயங்களை கொடுக்கவில்லை என்றாலும் சினிமா பாயிண்ட் ஆஃப் வியூவை விட்டுக்கொடுக்காது எடுத்த படைப்பு. இது போன்று நிறைய விமர்சனங்களை தெரிந்துகொள்ள இந்த NICE TAMIL BLOG - TAMIL WEBSITE என்ற வலைப்பூவை மறக்காமல் பதிவு பண்ணி சேகரித்துக்கொள்ளுங்கள் !!
No comments:
Post a Comment