ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர்வேர்ஸ் - இங்கே ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரங்களை பயன்படுத்தக்கூடிய உரிமைகள் சோனியிடம் இருப்பதால் சோனி பண்ணிய ஒரே ஒரு உருப்படியான காரியம் ஸ்பைடர்மேன் - மைல்ஸ் மோராலஸ் வெர்ஷன்னை திரைக்கு கொண்டுவந்ததுதான். இங்கே அடிப்படையில் மேல்ட்டிவேர்ஸ் கொண்டுவந்து மார்வேல் ஸ்டுடியோ படைப்புகளோடு இணைந்துவிடவேண்டும் என்று ஒரு தனியான பிளான் போட்டு வெளிவந்த படம்தான் இது என்றாலும் படத்தின் காட்சிகளில் ரொம்ப இன்னொவேஷன் இருக்கிறது. இந்த படத்தின் எந்த ஒரு ஸீன் எடுத்துக்கொண்டாலும் அப்படியே காமிக் புக்ஸ் படிக்கும் உணர்வை இந்த குறிப்பிட்ட அனிமேஷன் ஸ்டைல் கொடுத்து இருப்பது பாராட்டுக்கு இன்னும் குறிப்பாக இந்த படம் வெற்றிப்படமாக மாறியதற்கு காரணங்களை தேடினால் முதலில் வருவது பிரமாதமாக இருக்கும அனிமேஷன் ஸ்டைல். ரசிகர்களுக்கு இந்த அனிமேஷன் ஸ்டைல் புதிதாக இருந்தது. ஒரு ஒரு மாறுபட்ட பிரபஞ்சத்தை காட்டும்போதும் மாறுபட்ட அனிமேஷன் ஸ்டைல்கள் அந்த பிரபஞ்சத்தை கணக்கில் காட்டுகின்றன. இப்படி ஒரு இன்னொவேஷன் இருப்பதால் ஸ்டோரியின் டிசைன் கூட மற்ற சூப்பர் ஹீரோ படங்களின் ஆரிஜின் ஸ்டோரியினை விட்டு வித்தியாசப்படுத்தி காட்டிக்கொண்டு இருக்கிறது. இன்றைக்கு தேதிக்கு மெயின் ஸ்ட்ரீம் படங்களை பார்க்கும் ஆடியன்ஸ்க்கு ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர்வேர்ஸ் மாதிரியான புதுமையான கான்செப்ட்களை கொண்டுவந்து கொடுப்பதில் இருக்கும டெக்னிகல் ரிஸ்க் ஃபேக்ட்டர்ஸ் எல்லாம் புரிந்துகொண்டு ரொம்பவுமே நன்றாகவே எடுத்து இருக்கிறார்கள். ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் , லொகேஷன்ஸ் எல்லாம் அவ்வளவு விர்ச்சுவலாக இருந்தது , மோஷன் கேப்ச்சர் மற்றும் ஸ்டாப் மோஷன் போன்று டெக்னாலஜிக்களை வைத்து சோதப்பாமல் புத்தம்புது அனிமேஷன் ஸ்டைல் என்றாலும் கொஞ்சமும் குறை வைக்காமல் படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். பின்னணி இசை அருமை, இந்த படம் வெளிவந்த காலத்தில் வாட்ஸ்ஆப் டென்ஜர் பாட்டு இனஸ்டாக்ராமில் டிரெண்ட்டிங்கில் இருந்தது. குறிப்பாக கருப்பு வெள்ளை பிரிவினை பார்க்கும் சொசைட்டிக்கு வோக் கல்ச்சர் மூலமாக கொடுக்கப்பட்ட ஒரு பக்காவான விஷுவல் கான்செப்ட் இந்த படம், சூப்பர் பவர்ஸ்களை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை. சூப்பர் பவர்ஸ் நம்மை தேர்ந்தெடுக்கிறது. இந்த படம் போலவே இன்னும் நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள கண்டிப்பாக இந்த NICE TAMIL BLOG மற்றும் TAMIL WEBSITE வலைப்பூக்களை தொடர்ந்து தொடர்ந்துகொண்டு இருக்கவும்.
No comments:
Post a Comment