Tuesday, January 2, 2024

CINEMA TALKS - VENGAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஒரு சில படங்கள் திரைக்கதை என்று வரும்போது ரொம்ப ஸிம்பில்லாக இருக்கும், கிராமத்து புறநகர் பகுதிகளில் இருக்கும் ஒரு பெரிய குடும்பத்தை எதிர்க்கும் எதிரிகள் நிறைய பேர் , ஆனால் அரசியல் எதிரியாக முளைக்கும் ஒருவர் அந்த குடும்பத்தை பாதிக்க கொலை வெறியுடன் களம் இறங்குகிறார். இந்த குடும்பத்து பையன் நடக்கும் பிரச்சனைகளை எவ்வாறு அருமையாக தோற்கடித்து குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்று ஒரு கதைக்களம் கொடுத்து படம் மொத்தமும் வேங்கை என்ற பெயருக்கு பொருத்தமாக சீறிப்பாயும் வேகமாக நகரும் திரைக்கதையை கொடுத்து மாஸ் காட்டிய ஒரு படம். இந்த படம் ஒரு கமர்ஷியல் படம் என்பதால் அதிரடி வசனங்கள் , கமர்ஷியல் படங்கள் ஸ்டைல்லில் ஸாங்க்ஸ், டீசண்ட் காமிரா வொர்க் என்று நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் மெசேஜ் இந்த படத்தில் சொல்லி இருந்தாலும் படம் முடியும்போது மாஸ் மட்டும்தான் ஸ்டேட்டஸ் போல மனதுக்குள் இருக்கிறது. இந்த மாதிரியான பொழுதுபோக்கு மட்டுமே மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களை கதை என்பதை விடவும் நல்ல வேகமாக செல்லும் திரைக்கதையாக பார்த்தால் உங்கள் நேரத்தினை செலவு செய்யலாம் ! இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து. NICE TAMIL BLOG / TAMIL WEBSITE - வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !!

No comments:

GENERAL TALKS - இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்

1. ஒரு விஷயம் உன்னுடைய சாப்பாடு பற்றியது என்றால் அதற்காக நீ EXTREME-க்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் ! 2. இந்த உலகத்தில் எப்பொழுதும் மூளையை ப...