மிகவும் சமீபத்தில்தான் இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது , போன படம் போல பக்கா எண்டர்டெயின்மெண்ட் ஃபோகஸ் படம் கொடுப்பார்கள் என்றால் இந்த படத்தில் எண்டர்டெயின்மெண்ட் என்பதை விடவும் தரமான கதையை கொடுத்து அடுத்த பார்ட்டில் பேலன்ஸ் ஸ்டோரி கன்டினியூ பண்ணப்படும் என்று அல்ட்டிமேட் கிளைமாக்ஸ் வைத்து ஜாக்பாட் அடித்து இருக்கிறார்கள். போன ஸ்பைடர்மேன் இன்டு தி ஸ்பைடர் வேர்ஸ் படத்தை விடவும் 200 சதவீதம் பெஸ்ட்டான படம். ஒரு சிறப்பான சயின்ஸ் ஃபிக்ஷன் கொஞ்சமாகவும் சூப்பர் ஹீரோ ஆக்ஷன் மிகையாகவும் கொடுத்து ஃபேமிலி வேல்யூஸ் நிறைய கொடுத்து குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு அவ்வளவு சிறப்பான படத்தை கொடுத்து இருக்கிறார்கள். இந்த படங்களில் மட்டுமே கிடைக்கும் டிரேட்மார்க் அனிமேஷன் வேற லெவல்லில் அப்டேட் ஆகியிருக்கிறது. மியூசிக் : பொதுவாக ஹாலிவுட் படங்களில் ஸாங்க்ஸ் கொஞ்சமாகத்தான் இருக்கும் என்பதால் மியூசிக் நோட் பண்ணி சொல்லும் அளவுக்கு எல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த படத்தில் நிறைய எமோஷன்கள் நம்ம இளையராஜா அளவுக்கு மியூசிக் மூலமாகவே ஆடியன்ஸ்க்கு கன்வே ஆகிவிடும். படத்தின் தொடக்கத்தின் டிரம்ஸ் இசை முதல் கிளைமாக்ஸ் ஸஸ்பென்ஸ் இசை வரைக்குமே எல்லாமே வேற லெவல் வேற லெவல். இந்த படம் ALIENOID - PART ONE படம் போல இன்னும் அடுத்த PART- 2 வெளிவர காத்திருக்கும் படம். அடுத்த பாகத்துக்காக இன்னும் சில வருடங்கள் சந்தோஷமாக காத்திருக்கலாம்.
No comments:
Post a Comment