Monday, April 1, 2024

TAMIL TALKS - EP. 66 - இந்த அடுத்த வெர்ஷன் அப்டேட் என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை !


இன்றைக்கு என்னுடைய கண்களுக்கு முன்னால் நடக்கக்கூடிய பிரச்சனைகளையும் பார்க்கிறேன். அதே சமயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதையுமே நன்றாக தெரிந்துகொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலுமே இந்த கண்ணுக்கு தெரியாத மாய சக்தி எதிர் தரப்புக்குத்தான் சாதகமாக இருக்கிறது. வைஸ் சிட்டி , சான் ஆன்ட்ரியாஸ் கணினி விளையாட்டுக்களை போல அவர்களிடம் இருக்கும் இனம் புரியாத சக்திகளை  பயன்படுத்தி என்னையும் என்னுடைய வாழ்க்கையையும் தாக்குவது எல்லாமே மிகப்பெரிய குற்றம் ஆகும். இன்றைய தேதிக்கு நமக்கு தேவைப்பட வேண்டியது ஒரு போராட்டம். இப்படியே சென்றுக்கொண்டு இருந்தால் எதிர்ப்பவர்கள் துரிதமான இரத்தம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுவருவார்கள்.இன்னைக்கு தேதிக்கு எனக்கு என்ன சந்தோஷமான வாழ்க்கையா கிடைத்து உள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் நேரடியாக நம்மை கடித்து சாப்பிட்டுவிட மட்டும்தான் நம்மை சுற்றி இருப்பவர்கள் இருக்கிறார்கள். விவசாயம் பண்ண தெரியாத மரங்களை காப்பாற்ற தெரியாத எப்போது பார்த்தாலும் நல்ல விஷயத்தை குழந்தைக்கு சொல்வது போல சொல்லி புரிய வைத்தாலும் கோபப்பட்டு இருக்கும் எல்லாவற்றையும் குரங்கு போல பிடுங்கிக்கொண்டு இரத்தம் சாப்பிடும் ஆட்கள் இவர்கள். சரியான சலித்து எடுத்த முட்டாள்கள். தங்க முட்டையிடும் வாத்து கிடைத்தால் அப்படியே அறுத்து அன்றைக்கே குழம்பு வைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும் இவர்கள் தீனிக்காக தானியங்களை கூட போடாத சோம்பேறி பூனைகள். இவர்களுக்குதான் எதிர் தரப்பின் மொத்த ஆதரவும் இருக்கிறது. பின்னால் இருந்து உதைவாங்க வேண்டும் என்று எதிரிகள் கட்டாயப்படுத்தினால் கன்னத்தை காட்டுவது போல முதுகை காட்டிக்கொண்டு உதை வாங்க தயாராக இருக்கின்றார்களை அன்றி கொஞ்சமாவது மூளையையும் பலத்தையும் பயன்படுத்தி வெற்றி அடைய யோசிக்கின்றார்களா ? இவர்களால் நான் என்னுடைய வெர்ஷனை மேம்படுத்த முடியாமலே போகின்றது. 



 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...