Friday, April 5, 2024

GENERAL TALKS - வேர்ல்ட் ஃபேமஸ் பாங்க் கஸ்ட்டமர் கதை !




வயதான முதியவர் அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு நான்காயிரம் ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார்.  உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவரிடம். "ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள். உடனே அந்த முதியவர், ஏனென்று கேட்க, அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன், "இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்றாள் சற்றே கடுமையுடன். இதனால் கோபமான அந்த முதியவர், இப்பொழுது அமைதியாக தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து, "தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டிலுள்ள பண நிலுவையைப் பார்த்து அதிர்ச்சியானாள்.  அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவரிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் தாத்தா. உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது. எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை சிறிது நேரம் ஒதுக்கி வர இயலுமா?" என்று மிகப் பணிவோடு பவ்யமாக கேட்டாள்.  உடனே அந்த முதியவர் "இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டார். உடனே அந்த பெண், "பதினைந்து லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள். உடனே அந்த முதியவர் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டுமென்று கூற, அந்த முதியவரை மேனேஜர் அறைக்கு அழைத்து சென்று பிரத்யேகமாக குளிர் பானங்களை கொண்டுவந்து கொடுத்து பணத்தை எண்ணி முடிக்கும் வரையில் சமாளித்துக்கொண்டு இருந்தார்கள். அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள். அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.  அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள். சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்களின் சில சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும். குறிப்பாக நிறுவனத்தின் உரிமையாளர் என்றால் கவனமாக நடந்துகொள்ளுங்கள். 


1 comment:

  1. நம்மாளு கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார். மறுநாள் கடைத்தெருவில் நம்மாளு போய்க் கொண்டிருந்த போது கிணறு விற்றவன் அவரை சந்தித்தார். "அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அப்ப நம்மாளு தயங்காமல் "நேத்து நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலி பண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம்.

    ReplyDelete

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...