Friday, April 19, 2024

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற்றும் அவருடைய நண்பன் பேன்ஜி. இப்போது இவர்கள் இருவரும் மிஷன்னை முடிக்க மாறுவேடத்தில் வந்து வேலையை பார்த்துக்கொண்டு இருக்கும்போது ஸின்டிகேட் என்ற அமைப்பினை சேர்ந்தவர்களால் ஒரு பெரிய சதியில் மாட்டிக்கொண்டு ஒரு பெரிய ஆபத்து இருப்பதை கண்டுபிடிக்கவே அங்கே இருக்கும் ஆபத்தை அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ளும் முன்னால். அவர்கள் சென்ற இடத்தில் பயங்கரமான குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் இவ்வாறாக வெளிநாட்டில் நடந்த அசம்பாவிதத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று இன்டர்நேஷனல் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள், இப்படி மாட்டிக்கொள்ளும் ஈதன் அவருடைய அனுபவத்தை வைத்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படி சிறப்பாக சமாளித்தாலும் அவருடைய உயிருக்கு எங்கே போனாலும் ஆபத்து இருப்பது உறுதியானது. கோஸ்ட் புரோடோகால் இருப்பதால் ஐ எம் எஃப்  அமைப்பில் இருந்தும் எந்த உதவியும் கிடைக்காது என்பதால் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க போகிறார்கள் ? என்பது மட்டுமே அல்லாமல் எப்படி வில்லன்களுடைய உலக அளவில் நடக்கப்போகும் நாசவேலைகளையும் தடுக்கிறார்கள் ? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். ஆக்ஷன்னுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத மிஷன் இம்போஸ்சிபல் படங்களில் இந்த படம் நன்றாக அதிகபட்ச ஸ்டண்ட் காட்சி ரிஸ்க்கள் எடுத்து பண்ணப்பட்ட ஒரு படம் என்பதை துபாய் நாட்டின் தூசு புயல் காட்சிகளில் தெரிந்துகொள்ளலாம். கிளைமாக்ஸ் இந்தியாவில் நடப்பது போல் காட்சிகள் இருந்தாலும் வெளிநாட்டில்தான் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பற்றி தனியாக கட்டுரையே போடலாம். மற்றபடி இந்த படத்துக்கான விமர்சனம் இவ்வளவுதான். இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !

1 comment:

Tamizhal Inaivom said...

1. தொல்காப்பியம் - தொல்காப்பியம்

2. சிலப்பதிகாரம் - சிலப்பதிகாரம்

3. மணிமேகலை - மணிமேகலை

4. திருக்குறள் - திருக்குறள்

5. பதுப்பாட்டு - பதுப்பாட்டு

6. எட்டுத்தொகை - எட்டுத்தொகை

7. அகநானூறு - அகநானூறு

8. புறநானூறு - புறநானூறு

9. நற்றிணை - நற்றிணை

10. குறுந்தொகை - குறுந்தொகை

11. பரிபாடல் - பரிபாடல்

12. கலித்தொகை - கலித்தொகை

13. பொருநராற்றுப்படை - பொருநராற்றுப்படை

14. சிறுபாணாற்றுப்படை - சிறுபாணாற்றுப்படை

15. பெரும்பாணாற்றுப்படை - பெரும்பாணாற்றுப்படை

16. முல்லைப்பாட்டு - முல்லைப்பாட்டு

17. மதுரை காஞ்சி - மதுரை காஞ்சி

18. நெடுநல்வாடை - நெடுநல்வாடை

19. குறிஞ்சிப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

20. மலைப்பாடுகடாம் - மலைப்பாடுகடாம்

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...