Tuesday, April 2, 2024

CINEMA TALKS - DJANGO UNCHAINED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படத்துடைய கதையை பற்றி சொல்லி நான் நிறைய ஸ்பாய்லர் கொடுக்க விரும்பவில்லை. பணமும் பொருளும் ஆட்களுடைய சப்போர்ட்டும் இருப்பதால் தன்னை உயர்வாக நினைத்துக்கொண்டு தன்னை விட மற்றவர்கள் கீழானவர்கள் என்று ஒரு சமூகத்தையே மோசமாக நடத்திய அமெரிக்க கொடுமைக்காரர்கள் ஆப்ரிக்கக கறுப்பின மக்களுக்கு என்ன என்ன மோசமான விஷயங்களை செய்தார்கள் என்பதை இந்த படம் தெளிவாக காட்டியுள்ளது. வெளிப்படையான நடப்பு வாழ்க்கை வன்முறைகள் எப்போதுமே க்வேன்டின் டாரேன்டினோ படங்களில் சாத்தியமான ஒரு விஷயம்தான். இந்த படத்தில் எதிர்த்து நின்று கோபப்பட்டு தாக்கும் கிளைமாக்ஸ் காட்சிகளில் கண்டிப்பாக மிகப்பெரிய அப்ரேஷியேஷன் கொடுக்கலாம். பழைய காலத்து கதை என்பதாலும் பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ என்பதாலும் விசுவல் எஃபக்ட்ஸ்களில் குறைவே இல்லை. ஜேமி ஃபாக்ஸ் ஒரு சிறந்த ஹீரோ ஆக்டர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். சப்போர்ட்டிங் நடிகர்களாக இருக்கும் சாமுவேல் ஜாக்ஷன் , லியோனார்டோ டி காப்ரியோ , கிரீஸ்டோபர் வால்ட்ஸ் என்று எல்லோருமே சீனியர் ஆக்டர்ஸ் என்பதாலும் கதையின் எல்லா காட்சிகளுமே மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதாலும் இது ஒரு தரமான படம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம் !!

No comments:

இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 D

INTEL vs AMD பிரச்சினை எந்த நிறுவனம் சிறந்த கணினி செயலிகளை (CPU) உருவாக்குகிறது என்பதைப் பற்றியது.  2025 இல், இன்டெல் மற்றும் AMD இரண்டும் ச...