Friday, April 5, 2024

CINEMA TALKS - ALIENOID RETURN TO THE FUTURE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




பொதுவாக இரண்டு பாகங்களாக பிரித்து எடுக்கப்படும் கதைகளுக்கு மிகவும் மரியாதை இருக்கிறது. பாகுபலி போல கமேர்ஷியல் படங்களில் இந்த டெக்னிக் நன்றாக வேலை செய்துள்ளது. ஒரு அறிவியல் புனைவு கதையை மிகவும் சிறப்பாக இவ்வளவு நுண்ணியமாக சின்ன சின்ன ஸஸ்பென்ஸ்களிலும் கவனம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எக்சைட்மென்ட்டை உருவாக்கி இன்டர்நேஷனல் ஆடியன்ஸின் பாராட்டுக்களை கொள்ளையடித்த திரைப்படம் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஸ்பெஷல்தான். ஏலியனாய்ட் ஒரு இன்டர்நேஷனல் ஹிட் . இந்த படம் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் என்பதால் சென்ற படத்தில் மக்கள் எதிர்பார்த்த விஷயங்கள் என்னென்ன இருக்கிறதோ அதே விஷயங்களை இந்த படத்திலும் கொஞ்சம் குறை வைக்காமல் கிளைமாக்ஸ் வரையில் ஸ்லோமோஷன் இல்லாமல் வேகமாக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எதிர்கால காட்சிகளில் ஏலியன்ஸ் சண்டை போடும்போதும் காட்சிகளில் கணினி வரைகலையின் துல்லியத் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லை அதேபோல கடந்த காலத்து கிராமங்களையும் அந்த காலத்தில் நடக்கக்கூடிய சண்டைக் காட்சிகள் காட்டப்படும் காட்சிகளிலும் செட்களில் மற்றும் காஸ்ட்யூம்களில் எந்த விதமான குறைகளையும் சொல்வதற்கு இல்லைநடிப்பு மிகவும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள் சென்ற படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு தனித்தனி சப்போர்டிங் கதாபாத்திரங்களாக மட்டுமே இருந்தார்கள் ஆனால் இந்த படத்தில் கதாநாயகிகளும் கதாநாயகிகளும் எப்போது கடைசியில் ஒன்று சேர்வார்கள் என்று எக்ஸைட்மெண்ட் மக்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது குறிப்பாக கிளைமாக்ஸ்-ல் காலத்தை கடந்து செல்லும் சக்திகளை பயன்படுத்தி அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி அடைவதும் மாயாஜால சக்திகளை பயன்படுத்துவதும் என்று திரைக்கதையில் மிகவும் சிறப்பாக செய்யப்பட்ட காட்சிகள் பார்க்கவே மிகவும் பிரமாதமாக இருந்தது


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...