ஒரு விஷயத்தை செய்யும்போது அந்த விஷயம் தவறாகப் போய்விடமோ என்ற பயம் நமக்குள் இருக்கிறது இந்த ஒரு பயம் மிகும் சின்ன விஷயமாக நமக்கு தெரியலாம். ஆனால் இந்த பயம்தான் நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய தோல்விகளுக்கு காரணமாகிறது. இந்த பயத்தை நம்முடைய மனதுக்குள் வைத்துக் கொண்டால் மற்றவர்கள் நம்மை மரியாதையே இல்லாமல் நடத்துகிறார்கள். நமக்கான மரியாதை வேண்டும் என்றால் நாம் நம்முடைய மனதில் இருக்கும் பயத்தை கண்டிப்பாக எடுக்க வேண்டும். மரண பயம் தோல்வி பயம் இந்த மாதிரியான நிறைய பயன்கள் நமக்குள் இருக்கிறது. பணம் இல்லாமல் போய் விடுமோ ? என்ற பயம் எப்போதும் நம்மை அனைவரும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களே ? இந்த விஷயத்தில் நாம் ஜெயித்தே ஆக வேண்டுமே ? இந்த விஷயத்தில் நாம் தோற்றுவிட்டால் நம்மிடம் இருக்கும் விஷயங்களை இழந்து விடுவோமே ? என்ற மாதிரியான நிறைய பயன்கள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது இந்த பயங்களை நமக்குள்ளே வைத்து இருப்பதால் எந்த விதமான பிரயோஜனமும் கிடையாது நடக்கக்கூடிய செயல்களில் நம்முடைய உடலும் மனதும் சிறப்பாக இருந்து நம்முடைய சுற்றுச் சூழல்களில் இருக்கக்கூடிய விஷயங்களை நாம் சரியாக பயன்படுத்தினாலே போதும் நம்மால் வெற்றி அடைய முடியும் மற்றபடி இந்த பயம் பதட்டம் இந்த மாதிரியான விஷயங்களை உங்களுடைய மனதுக்குள் வைத்துக் கொண்டு இருந்தால் உங்களுடைய முன்னேற்றத்திற்கு இவைகள் மிகப்பெரிய தடை சுவராக இருக்கப்போகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை. நீங்கள் என்ன உயிரே கையில் பிடித்துக் கொண்டேவா வாழ போகிறீர்கள் ? ஒரு நாளில் உங்களுடைய உடலுக்கு உயிர் சொந்தமில்லை என்று சொல்லி இந்த உடலை விட்டு உயிர் போக தான் போகிறது. அந்த நாளில் உங்களுடைய வாழ்க்கை என்ற புத்தகம் தன்னுடைய கடைசி நான்கு வரிகளை எழுதிவிட்டு காலியாகத்தான் போகிறது. இந்த வாழ்க்கை என்ற புத்தகத்தை வெறும் பயத்தினாலும் சோர்வினாலும் ஒரு நாட்களும் தோற்றுக் கொண்டே இருந்தேன் என்று எழுதப் போகிறீர்களா? இல்லை ஒரு ஒரு வெற்றிகளாக நீங்கள் குவித்துக்கொண்டு மிகவும் இன்ட்ரஸ்டிங்கான புத்தகம் ஆக நீங்கள் இந்த வாழ்க்கை என்ற புத்தகத்தை மாற்ற போகிறீர்களா ? இந்த வாழ்க்கைக்கு இந்த விஷயத்துக்கான இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு உங்களிடத்திலே இருக்கிறது உங்களுடைய சக்தி உங்களைவிட சக்தி வாத எதிரிகளை உங்களுடைய பயத்தை நீக்கிவிட்டால் உங்களால் ஜெயித்து விட முடியும் என்று நான் கண்களை மூடிக்கொண்ட கருத்துக்களை இங்கு நான் சொல்லவில்லை. கண்களை திறந்து கொண்டே சொல்கிறேன். பயமிருப்பதால் உங்களுடைய எதிரிகளை விட வேகத்தில் நீங்கள் குறைந்து காணப்படுவீர்கள் ஆனால் எப்போது நீங்கள் பயமில்லாமல் இருப்பீர்களோ அப்போது உங்களுடைய உடலையும் மனதையும் உங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு உங்கள் எதிரிக்கு நேருக்கு நேரான சவாலாக நீங்கள் கடினமான முயற்சியாக இருக்கப் போகிறீர்கள் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் !
No comments:
Post a Comment