வெள்ளி, 5 ஏப்ரல், 2024

GENERAL TALKS - கம்பெனி வேலையை விட்டு தூக்கவேண்டும் என்று நினைத்தால் எப்படியும் தூக்கிவிடுவார்கள் !




ஒரு நாட்டில் மூன்று அரசியல்வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள். மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது. மூவரும், மேலோகம் சென்றார்கள். அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ - புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனைகளை வழங்கி கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம் அளித்தார். பயந்து கொண்டே இருந்த இந்த மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல முதல் இருவரையும் சொர்க்கத்துக்கு போக சொன்னாரு இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆனால், மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை. அவர் யமதர்ம ராஜா விடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்கு தொண்டு புரிந்துள்ளோம் அப்படி இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை? என்று வினவ? உடனே யமதர்ம ராஜா அவர் கேட்டுக்கொண்டமைக்கு, உங்கள் மூவருக்கும் போட்டி வைக்கிறேன் நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய் என்று மூன்றாவது நபரிடம் யமதர்ம ராஜா உரைத்தார். நான் உங்கள் மூவருக்கும் முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன். முதல் போட்டி ஆரம்பம்  நபர் 1 – ஆங்கிலத்தில் INDIA என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார். நபர் 2 – ஆங்கிலத்தில் ENGLAND என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார். நபர் 3 – ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA என்று எழுத சொன்னார் அந்த தலைவருக்கு தெரிய வில்லை பாஸ் ஆகவில்லை. மறுபடியும் அந்த மூன்றாவது நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம் ஒரு சான்ஸ் கேட்டார். அதற்கும், அப்படியை ஆகட்டும் என்று சொன்னார்.  இது தான் கடைசி சான்ஸ் என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெய்த்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி இருந்தது. இப்போது இரண்டாவது போட்டி தொடங்கியது, நபர் 1 – எப்பொழுது இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தது? 1947 என்று சொல்லி- பாஸ் பண்ணிவிட்டார்.  நபர் 2 – அந்த போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்டார்? அதற்க்கு அவர் மூன்று ஆப்ஷன் தந்தார். 1,00,000 – 2,00,000 – 3,00,000.  இந்த கேள்விக்கு குத்துமதிப்பாக 2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.  இப்போது நபர் 3 – அந்த 2,00,000 வீரர்களுடைய விலாசம் கேட்டார்?  அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்பு கொண்டு நரகத்தை அடைந்தார். இந்த கதையின் கருத்து என்னவென்றால் கம்பெனி மானேஜ்மென்ட் ஸ்கெட்ச் போட்டுட்டாங்கனா தூக்காமா விட மாட்டாங்க என்பதுதான். ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒருவருக்கு ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.  அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது. கடைசியாக மேனேஜர், “நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், “ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!” என்று வரத்தை கேட்டார். கம்பெனியில் நன்றாக வேலை பார்த்தாலும் கூட நாம் சந்தோஷமாக இருந்தால் மேலதிகாரிகளுக்கு கண்டிப்பாக பொறுக்காது. இந்த பொறாமை காரணமாக கடைசி வரைக்கும் முன்னேறவே விடமாட்டார்கள். 

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...