Tuesday, April 2, 2024

GENERAL TALKS - லெட் மீ டேல் அ குட்டி ஸ்டோரி !!




ஒரு ஊரில் “மரம் நடும் விழா “  நடைபெறுவதாக இருந்தது. இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது. அவர்களது வேலைகள் என்னவென்றால் முதலாவது நபருடைய வேலை பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டும். இரண்டாவது  நபருடைய வேலை அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும். மூன்றாவது  நபருடைய வேலை தோண்டிய பள்ளத்தை மண் கொண்டு மூட வேண்டும். அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊருக்குள்ளே பத்து தெருக்களில் செய்து முடித்தனர். அடுத்த நாள் அடுத்த ஊருக்குள்ளே அடுத்த பத்து தெருக்கள் என ஏற்பாடு பண்ணப்பட்டு இருந்தது. அடுத்த நாள். பள்ளம் தோண்டுபவர் தோண்டிக்கொண்டு சென்றார். செடியை நட வேண்டிய இரண்டாவது நபர் வேலைக்கு வரவில்லை. அது பற்றிக் கவலைப்படாத மூன்றாவது நபர் தோண்டிய பள்ளத்தை மூடிக்கொண்டே வந்தார். இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர். ”வணக்கம். இது என்ன நீங்கள் இப்படி பண்ணிக்கொண்டு இருக்கிறீர்களே ! நீ பள்ளம் தோண்டியதும். இவர் அதை மூடி விடுகிறாரே. என்ன விஷயம் ” என்றார். அதற்கு முதல் நபர். ” ஐயா. மரம் நடும் விழாவை நடத்தும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய வேலையை மட்டும் இன்று நாள் முடிவதற்குள் செய்தால்தான் எங்களுக்கு சம்பளம் போடுவார்கள். அதில் என் வேலை பள்ளம் தோண்டுபவது. செடி நடுவது இரண்டாம் நபர் வேலை. இதோ நிற்கும் மூன்றாம் நபர் பள்ளத்தை மூடவேண்டும். செடி நடும் நபர் இன்றுவரவில்லை. அதனால் வேலை தடைபெறக்கூடாது என எங்கள் இருவர் வேலையை சரியாக செய்து விடுகிறோம்” என்றார். இப்படித்தான் போதுமான நிர்வாக திறமைகள் இல்லாமல் எத்தனையோ நல்ல திட்டங்கள் மக்களை சென்று அடையாமல் போய்விடுகிறது. ஒரு நல்ல நிர்வாகம் இல்லாமல் சம்பளம் போய்விடும் என்றும் அதிகமாக வேலை பார்க்க கூடாது என்றும் வேலைக்கு வருபவர்களுடைய மனநிலை வேலையை முடித்து வீட்டுக்கு போனால் போதும் என்றும் மட்டுமே உள்ளது. இந்த சம்பவம் உண்மையாக கூட இருக்கலாம். நடப்பு வாழ்க்கையில் கிராம மேம்பாட்டு திட்டங்களில் இப்படித்தான் குழப்பங்கள் நிறைய இருக்கிறதே ? நிர்வாகத்தை சரி செய்தால் மிகவும் சிறப்பு என்பதுதான் எங்களது கருத்து. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...