இன்ஃபினிட்டி - இந்த படத்தின் கதை - போன ஜென்மத்து நினைவுகளுடன் மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து மறு ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு குறிப்பிட்ட திறமை மிக்கவர்களுடைய அமைப்புதான் இன்பினிட். இந்த அமைப்பு அவர்களின் திறன்களை பயன்படுத்தி பாதுக்கப்பதால் உலகம் காப்பாற்றப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த அமைப்பின் முன்னால் செயல் தலைவர் காலமாக மறுஜென்மம் எடுத்த மார்க்குக்கு நினைவுகள் இல்லவே இல்லை. இப்போது இவருக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்தால்தான். இவரையும் இந்த அமைப்பையும் மொத்தமாக காலிபண்ண வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் இன்னொரு அமைப்பை இவர்களால் தடுக்க முடியும். வில்லன் மிகப்பெரிய சக்தியை தன்னுடைய கைகளுக்குள் வைத்துள்ளான். குறிப்பிட்ட ஒரு ஆயுதத்தை பயன்படுத்தும் பட்சத்தில் இந்த உலகத்தில் உயிரோடு இருக்கும் அனைவரும் கரைந்து போய்விடுவார்கள் என்று ஆபத்து உருவாகிறது. இப்போது எப்படி மறு ஜென்மமாக எடுத்து இப்போது மறுமுறை பிறந்திருக்கும் கதாநாயகர் இந்த பிரச்சினைகளில் இருந்து வில்லனை தடுத்து உலகத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது. படத்துடைய விஷுவல் டிசைன் மற்றும் எக்ஸிகியூஷன் மிகவுமே அருமையாக இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் என்பதால் பெரிய பட்ஜெட் படத்துக்கான விஷயங்கள் நிறையவே இருக்கிறது. விஷுவல் பேக் ஷாட் மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை குறை சொல்வதற்கு எதுவுமே இல்லை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நன்றாக வேலையை பார்த்து இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் இந்த படத்தோட கதைக்காக நீங்கள் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். இவ்வளவுதான் இந்த வலைப்பூவில் இன்றைய நாளுக்கான கருத்து இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு ஃபாலோவிங் கொடுக்கவும்
No comments:
Post a Comment