அந்த காலத்தில் வெளிவந்த படங்கள் இப்போது பார்த்தால் கூட நன்றாக இருக்கும். அப்படி ஒரு படம்தான் இந்த படம். இவ்வளவு தரமான எடிட்டிங் மற்றும் ஸ்க்ரீன் ப்ளே ஒரு கருப்பு வெள்ளை படத்தில் இருக்கிறதா ? என்று வியக்க வைத்த ஒரு திரைப்படம் இந்த 'வல்லவனுக்கு வல்லவன்' . இந்த படத்தை பார்க்கும்போது இந்த படத்திலேயே நமக்கு அவ்வளவு இண்டரெஸ்ட் வந்துவிடும். அப்பாவி ஹீரோவை நன்றாக ஒரு கொள்ளை பழியில் மாட்டிவிட்டு இருக்கும் அமைப்பு அடுத்து என்ன செய்ய நடக்கப்போகிறது ? என்று விறுவிறுப்பாக யோசிக்க வைத்துவிடுகிறது. திரைக்கதைக்கு நடுவே நிறைய பாடல் காட்சிகள் கொடுத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் வசனங்கள் வேற லெவல். இந்த படத்தில் மனதில் நிற்பது போல வசனங்கள் இருக்கிறது. இந்த படத்தில் எனக்கு தெரிந்த வகையில் திரைக்கதைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து அன்றைய கால நடப்பு நிகழ்வுகளுக்கு தகுந்த மாதிரியாக மக்களுடைய மனதை கவரும் வகையில் திரைப்படங்களை ரசிக்கும் சராசரி ஆடியன்ஸ்க்கு புரிவது மாதிரி வசனங்கள் மற்றும் கதையில் ஹீரோவை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஹீரோவும் அவருடைய நண்பரும் தெரிந்துகொள்ளும்போது லொகேஷன்களின் காட்சி அமைப்பு சிறப்பாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அடுத்த என்ன நடக்கும் ? எப்படி நடக்கும் ? என்ற மிஸ்டரி இந்த படத்தில் மிகவும் நன்றாகவே செய்துள்ளார்கள் இதுபோல ஒரு படத்தை நான் பார்த்ததில்லை. இந்த படம் எப்போதுமே கமர்சியல் ஆடியன்ஸை என்டர்டைன்மென்ட் பண்ணக்கூடிய படங்களுக்கு எல்லாமே ஒரு பென்ச் மார்க் படமாக இருக்கிறது என்று பாராட்டுக்கள் கொடுத்து இந்த படத்தை சொல்லலாம். இந்த படம் திரைக்கதை எழுதுவதற்கு ஒரு சிறப்பான இன்ஸ்பிரேஷன்னாக இருக்கிறது. கருப்பு வெள்ளைக் காலத்திலேயே இது போன்ற ஒரு ஸ்கிரீன் பர்சன்டேஷன் நான் பார்த்ததே இல்லை. இதனால் இந்த படம் காலத்தால் அழியாத படம் என்றே சொல்லலாம் இதுதான் இந்த படத்தை ஆச்சரியப்பட வைக்கிறது.
No comments:
Post a Comment