Saturday, April 13, 2024

CINEMA TALKS - JAPAN (TAMIL MOVIE) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இந்த படத்துடைய கதையோ இல்ல இந்த படத்தை திரை கதையோ எதுவோ ஒன்று பார்க்கும் ஆடியன்ஸை மிகவும் சலிப்பூட்டுகிறது.  ஒரு நல்லகதை தான் நல்ல திரைக்கதைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால்  காட்சிகளை நன்றாக எடுக்காமல் பண்ணவேண்டிய விஷயங்களை பண்ணாமல் விட்டுவிடும் குருட்டுத்தனமாக காட்சிகளை கேமிராவில் எடுத்துக்கொண்டே தள்ளியதால் சம்பந்தமே இல்லாமல் ஆயிரம் சம்மந்தம் காட்சிகளும் பின்னி பிணைந்து இந்த படத்தில் இருக்கிறது.  சம்பந்தமே இல்லாத காட்சியில் சம்மந்தம் இல்லாமல் டயலாக் பேசுவது சம்பந்தமாக மிகப்பெரிய பட்ஜெட்டை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் !!! திரைக்கதை என்றால் அங்கேதான் மிகப்பெரிய சொதப்பல் இருக்கிறது.  கடல் அளவுக்கு பட்ஜெட் இருந்தாலும் ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே மோசமாக அமைக்கப்பட்டுள்ளது. டூயட் காட்சிகள் சொல்லலாம்.  அதாவது இந்த படத்தில் இந்த பிளாஷ்பேக் காட்சிகள் முதல் நடப்பு காட்சிகள் வரை எல்லாமே சலிப்புதான்.  ஒரு கேரக்டர் இதுதான் என்றால் இந்த கேரக்டருக்கான விஷயங்கள் இதுதான் இந்த படத்தில் இருக்க வேண்டும் என்றால் அந்த படத்தில் கஷ்டப்பட்டு மேலே சென்று மக்களுக்கு புரிந்துகொள்ள வசதியாக உயிர் கொடுக்கும் மாயாஜாலம் போல அந்த கேரக்டரை கொண்டு வர வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் படத்தில் சொல்லப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த படம் கொடுக்கவில்லை. மற்ற படங்களை விட இந்த படம் காரத்திக்காக பார்க்கலாம் என்றால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு பெஸ்டிவல் டைமில் மோசமான ஏமாற்றம் தான் கிடைக்கிறது.  எப்படியும் எல்லா பெரிய கதாநாயகர்களும் 25வது படம் 50வது படம் 75வது படம் என்றால் அந்த படத்தில் ஏதாவது ஒரு சொதப்பல் ஏதாவது ஒரு குறையாவது இருக்கத்தான் செய்கிறது இந்த படம் நல்ல படமா ? இல்லையா ? என்று கேட்டால் நல்ல படம்தான் ஆனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத படம்.  இந்த படத்தில் ஒரு மாஸ் எதிர் பார்த்தாலும் இந்த படம் அதனுடைய கான்செப்ட் என்ற பாதையில் யோசித்து அதனுடைய கதையை மட்டும் நன்றாக போக செய்து சலிப்பு பண்ணி உள்ளது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...