Tuesday, April 9, 2024

CINEMA TALKS - JIMMY NEUTRON - BOY GENIUS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 \\



இந்த கதை 2001 - ல் வெளிவந்த ஒரு குறைவான குட்டி பட்ஜெட் அனிமேஷன் படத்துக்கான கதைதான்.  இருந்தாலும் இந்த படத்திலேயே கதையின் தயாரிப்பு அடிப்படையில் ஒரு முழு நீள திரைப்படமாக வெளியிட்டு மக்களை பொழுது போக்க வைக்க விஷயங்களை இந்த கதைக்குள்ளே கொடுக்க முயற்சி செய்துள்ளார்கள்.  ஜேம்ஸ் இசாக் நியூட்ரான் - அதாவது ஜிம்மி நியூட்ரான் -  மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை மிகவும் சாதாரணமாக செய்யக்கூடிய ஒரு கார்ட்டூன்னிஷான சின்ன பையன். ஒரு நாள் இந்த பையன் சும்மா இருக்காமல் எப்படி விண்வெளியில் இருக்கும் ஏலியன்சை பூமிக்கு கொண்டு வந்து கம்யூனேக்கேஷன் பண்ண முயற்சிகளை பண்ணி தனக்குத்தானே ஒரு மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கி நன்றாகவே மாட்டிக்கொள்கிறான்.  தன்னுடைய அறிவு திறனையும் கண்டுபிடிக்கும் வேகத்தையும் வைத்து அந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்கிறான் ? - என்பது தான் இந்த படத்தின் கதைக்களம். ஒரு வரியில் சொல்லப்போனால் அனிமேஷன் மிகவும் மோசம் என்றே சொல்லலாம். காட்சிகள் கதாப்பத்திரங்களின் முகங்கள் பார்க்கும்போதே நம்பும் படியாக கூட இல்லை.  ஆனால் ஒரு டெலிவிஷன் திரைப்படம் போல இருக்கும் குவாலிட்டியில் இதை தியேட்டர்களாக ரிலீஸ் செய்தார்களா இல்லையா என்பதை இன்னும் எனக்கு குழப்பமாக தான் இருக்கிறது ஆனால் நிச்சயமாக ஒரு டெலிவிஷன் பியூச்சர் என்றும் அளவுக்கு மட்டும்தான் இந்த படத்திலேயே குவாலிட்டி இருக்கிறது என்பதை சொல்லலாம். இருந்தாலும்  2001 - 2002 என்ற வருடங்களின் காலகட்டத்தினை பார்க்கும்போது CGI தொழில்நுட்பம் அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதால் இந்த படத்தை கண்டிப்பாக குறை சொல்ல முடியாத. இந்த படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்பதால் கிளாசிக் என்று சொல்லப்படும் தகுதியை அடைந்து கலாச்சார கிளாசிக் ஆக இந்த படம் மாறுவதற்கு இன்னும் நிறையவே கவனம் கொடுத்து இந்த படத்தை எடுத்துக்கொண்டதுதான் காரணம் ! இவ்வளவுதான் இந்த வலைப்பூவில் இன்றைய நாளுக்கான கருத்து இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு ஃபாலோவிங் கொடுக்கவும்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...