Tuesday, April 2, 2024

GENERAL TALKS - மற்றவர்கள் மாறும்போது நாமுமே மாறத்தான் வேண்டும் !

 


நான் மிகவும் அதிகமாக யோசித்து பார்த்தாகிவிட்டது. பிரச்சனை எப்போதுமே என்னிடம்தான் இருக்கிறது என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தால் அது முற்றிலும் தவறானது ஆகும். இது எல்லாமே என்னை சுற்றி நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலுமே அடங்கியுள்ளது. இன்னைக்கு நான் எதிர் தரப்புக்கு சொல்லும் விஷயம் இதுதான். என்னுடைய சம்பாத்தியத்தை பறிப்பதுதான் உங்களுடைய ஆசைகள் என்றால் இதனால் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள் நான் உங்களையும் சேர்த்துதான் சொல்கின்றேன். தோல்விகளை கொடுக்கலாம் ஆனால் உடைந்து தரையில் விழுந்தால் மறுபடியும் எழுந்துகொள்ள முடியாது என்ற அளவுக்கு ராஜதோல்வியை ஒருவருக்கு கொடுக்க கூடாது. இந்த நேரத்தில் நான் அதிகாரத்தில் இருந்திருக்க வேண்டும். எனக்கு தேவையான எல்லா விஷயங்களுமே என்னிடம் ஏற்கனவே இருந்திருக்க வேண்டும். இப்படி எந்த விஷயமுமே கொடுக்காமல் தேவையான பொருட்கள் இல்லாமல் சமையல் செய்து அனைவருடைய பசியை போக்க என்னிடம் ஒன்றும் அட்சய பாத்திரம் எல்லாம் இல்லை. இன்னைக்கு தேவைக்கு எனக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் வேண்டும். உள்ளூர் அரசியலை போல மக்களுடைய நம்பிக்கைகளை குப்பைகளை போல கசக்கி தொட்டியில் குப்பைத்தொட்டியில் போட்டு வைத்து சுய நலமாக இருப்பது எப்படி ஒரு நல்ல அதிகாரம் ஆகும். சாகாவரம் பெற்ற ஒரு அதிகார வர்க்கம் ஒருவர் மேலாக இருக்க வேண்டும் அவருக்கு கீழே பிறப்பால் பிறந்ததால் மட்டுமே மற்றவர்கள் தரையில் இருக்க வேண்டும். மேலே வரவேண்டும் என்று யோசித்தால் பயங்கரமாக தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றால் அது நிச்சயமான தவறான ஒரு விஷயம்தான். நான் இதுவரையில் பார்க்கின்ற எல்லோருமே எதிர் தரப்புடைய சக்திகளை பார்த்து புரிந்துகொண்டுவிட்டு இனிமேல் எதிர் தரப்பை எதிர்த்து பாதிப்பை அடைய கூடாது என்பதில் மிகவுமே உறுதியாக இருக்கின்றார்கள். நான்தான். நான் மட்டும்தான் முதல் முதலாக எதிர் தரப்பை வெல்ல முடியும் என்று நம்பிக்கையாக போராடுகிறேன். இங்கே நான் செய்வது கடைசியில் எனக்கு வெற்றிகளை கொடுக்க முடியாமல் போனால் என்னை விட மிகப்பெரிய முட்டாள் என்று உலகத்தில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். தன்னுடைய வாழ்நாளின் ஒரு ஒரு நொடியிலும் உலகமே எந்த ஒரு விஷயம் முட்டாள்தனம் என்று நினைக்கின்றதோ அந்த விஷயத்தை நான் அறிவுப்பூர்வமாக பார்த்து அடைய வேண்டிய முயற்சியாகளை பண்னினேன். அதிகாரத்தை என்னுடைய கைகளில் கொடுப்பதை தவிர்த்து நான் இப்போது மோதுகின்ற இடத்தில் இருக்கும் எதிர் தரப்பினருக்கு எந்த ஒரு ஆப்ஷனுமே இல்லை என்பதை நன்றாக நினைவில் கொள்க. இப்படி எல்லாம் யோசிக்கும்போதுதான் என்னால் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. கடவுளே வந்து அவதாரம் எடுத்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் என்னதான் எல்லோருமே ஆன்ட்ராய்ட் ஃபோன் வைத்து இருக்கும் காலத்தில் கடவுள் பட்டன் ஃபோன் பயன்படுத்திக்கொண்டு இருந்தால் அவருக்கே கெத்து குறைந்துவிடும் ! மற்றவர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். இன்றைக்கு உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள் என்ற காரணத்தால் எப்போதுமே உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா ! இந்த உலகத்தில் எப்போதுமே போர்களுக்கு நீங்கள் தயாராகவே இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால் நீங்கள் எடுக்கும் ஒரு ஒரு போரிலும் வெற்றியை அடைய நீங்கள் கட்டாயப்பட்டு உள்ளீர்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...