Thursday, April 4, 2024

TAMIL TALKS - EP. 72 - முன்னேற முடியாமல் போக காரணம் என்ன ?

 


ஒரு ஒரு நாளுமே வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க நரக வேதனையாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் காரணம் என்ன ? போதுமான புத்திசாலித்தனம் இப்போது நம்மிடம் இல்லை. காலை 3:00 மணிக்கு அலாரம் வைத்து வேலையை ஆரம்பித்தால் நாம் சராசரியாக பண்ணும் வேலைகளில் இன்னொரு 3 மணி நேரம் கூடுகிறது. நம்ம வாழ்க்கையில் இப்படி ஒரு முடிவு எடுத்துவிடுகிறோம் ஆனால் உறுதித்தன்மைதான் இல்லை. மறுநாள் காலையும் 9:00 மணிக்குதான் எழுந்து வேலையை பார்க்கின்றோம். இந்த மனக்கட்டுப்பாடு இல்லாததால்தான் என்னுடைய பல வருடத்தின் ப்ராஜக்ட்டாக இருக்கும் தொழில் நுட்ப நிறுவனம் ஒரு கனவு ப்ராஜக்ட் என்று இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த மனக்கட்டுப்பாடு பற்றாற்குறை மட்டுமே இந்த வகையில் தோல்விக்கு காரணம் என்று சொல்ல முடியாது. தோல்விக்கு உண்மையில் நிறைய காரணங்கள் இருக்கிறது. இப்போது நடப்பு பேச்சுக்கு வருவோம். இந்த நாளில் கண்களை விழித்துக்கொண்டு இருக்கிறோம். பயணங்களை மேற்கொள்கிறோம். வேலைகளை செய்கிறோம். மேலும் நிறைய நிறைய விஷயங்களை செய்கிறோம். இருந்தாலும் நேற்றைய நாளுக்கு இன்றைய நாளை ஒரு பின்னடைவான நாள் என்றே முடிக்கின்றோம். நேற்றைய நாளை விட இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக முடிக்க முடிகிறது என்றால் அது பணம் சம்பாதிப்பவர்களுடைய நாட்களில் மட்டும்தான் முடிகிறது. இருந்தாலும் நல்ல வகையில் காசு பணம் சம்பாதிப்பது அவ்வளவு சுலபமாக நடத்த முடிகிற காரியமா ? நூறு சதவீதம் மக்களில் ராஜாவாக வாழும் மக்கள் தனக்கு கீழே வேலை பார்க்கும் வேலைக்காரர்களாக மட்டும்தான் மீதம் இருக்கும் அனைத்து மக்களையும் நடத்துகிறார்கள். கவலை இல்லாமல் வேலை பார்க்க முடிவது இல்லை. பெரிய பிறப்பு பெரிய வளர்ப்பு என்று பெரிய குடும்பத்தில் பிறந்த குழந்தை வளர்ந்தாலும் கூட எளியோர் வீட்டு குழந்தையை ஒரு அற்பமான பூச்சியை புழுவை பார்ப்பதை போலத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறது அல்லவா ? இதுக்கு காரணம் பிறப்பில் இருந்தே பெரிய குடும்பத்துக்கு மென்மேலும் வெற்றிகளை அடைந்துகொண்டே இருக்க காலம் நன்றாக சப்போர்ட் செய்கிறது. அதே சமயத்தில் சின்ன குடும்பத்துக்கு இன்னும் நிறைய கஷ்டங்களை கொடுத்து இவர்களை குழப்பத்துக்கு உள்ளாக்கி அழவைத்து பார்க்கலாம் என்பதில் மிக மிக கவனமாக இருக்கிறது. அனைத்துமே மிக மிக நுணுக்கமாக நடக்கிறது ஆகையால் யாருக்குமே எந்த சந்தேகமுமே வருவதே இல்லை. இந்த விஷயங்களுக்கு பின்னால் இருப்பது எதிர் தரப்பினர் என்றால் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் எனக்கு செய்த காரியங்களுக்கு எல்லாம் நன்றாக செமத்தையாக என்னிடம் வாங்கி காட்டிக்கொள்ள போகின்றார்கள் என்பதை மட்டும் என்னால் உறுதியாகவே சொல்ல முடியும். இந்த போஸ்ட் இவ்வளவுதான். இதுபோலவே நிறைய போஸ்ட்களை படிக்க வேண்டும் என்றால் இந்த வலைப்பூவை ஃபாலோ பண்ணுங்கள். மேலும் இந்த வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள். இன்னும் நிறைய கருத்துப்பகிர்வு இந்த வலைப்பூவின் உதவியுடன் செய்யலாம். வாழ்க்கையில் வெற்றிகரமான நாட்களை வாழ்ந்துவிட வலைப்பூ குழுவினரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துககொள்கிறோம். 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...