Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 81 - இந்த விஷயத்தை கூட கொடுக்க முடியாதா ?



நிறைய வீடுகளில் தண்ணீரை குடிக்க பிளாஸ்டிக் சாமான்களை பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பாத்திர கொள்கலன் பொருட்களில் குடிக்கும் தண்ணீரை நிரப்பி வைத்து இருக்கிறார்கள். இது மாதிரியான விஷயங்களை நீங்கள் கிராமத்தில் இருக்கும் வீடுகளில் நீங்கள் இப்போதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கலாம் கிராமத்தில் இருக்கும் வீடுகளில் பிளாஸ்டிக் குடங்கள் மட்டும்தான் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதால் பிளாஸ்டிக் குடங்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த பிளாஸ்டிக் குடங்களில் இருக்கும் சின்னச்சின்ன பிளாஸ்டிக் துகள்கள் நாம் குறிக்கக்கூடிய ஒவ்வொரு டம்ளர் தண்ணீரும் சேர்ந்து நம் உடலுக்குள் செல்கின்றது ஆனால் பிளாஸ்டிக் குடங்களில் இருந்து வரக்கூடிய இந்த சின்ன சின்ன துகள்களாக இருக்கும் பிளாஸ்டிக் நம்முடைய இரத்தத்திலேயே நிரந்தரமாக தங்கி விடுகிறது இது நம்முடைய ரத்தத்திற்கு பின் நாட்களில் புற்றுநோய் மற்றும் ரத்த பாதிப்பு நோய்களை உருவாக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது இப்போது என்னுடைய மனதுக்குள் உள்ள தர்ம சங்கடமான கேள்வி என்னவென்றால் இந்த பிளாஸ்டிக் குடங்களை இரும்பு குடங்களாக மாற்றக்கூட போதுமான அளவுக்கு காசு ஏன் மக்களுக்கு கடவுள் கொடுப்பதே இல்லை ? போதுமான படம் கிடைக்கிறது என்ற பட்சத்தில் இந்த பிளாஸ்டிக் குடங்களில் இரும்பு குடங்களாக மாற்றப்பட்டு மாற்றப்பட்டு இவர்களுடைய ஆரோக்கியத்தில் கேன்சர் போன்ற கொடிய வியாதி வரக்கூடிய விஷயங்கள் தடுக்கப்படுகிறது அல்லவா ? கடவுள் நிஜமாகவே நிறைய பணம் வைத்திருந்து மற்றவர்களுக்கு சப்போர்ட் செய்யும் மனிதராக இருந்தால் ஏன் இப்படிப்பட்ட விஷயங்களில் பிளாஸ்டிக் குடங்களை இரும்பு குடங்களாக மாற்றுவது போன்ற ஒரு சின்ன விஷயத்தில் கடவுள் ஏன் சப்போர்ட் செய்யவில்லை ? இந்த விஷயங்களில் எதிர் தரப்பு இவர்களுடைய வாழ்க்கையில் நிரந்தர கஷ்டம் இருக்கும் வரைக்கும்தான் எனக்கு இலாபம் என்பது போல நடந்துகொள்கிறார்கள் என்று என்னுடைய கருத்து ! இருந்தாலும் கேன்ஸர் வந்தாலும் பரவாய்யில்லை ! வசதி வாய்ப்பை கொடுக்க மாட்டேன் என்றால் கண்டிப்பாக இது மோசமான விஷயம்தான் ! 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...