Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 77 - காலத்தில் இந்த மாற்றம் தவறானது !



இந்த விஷயத்தை கூட ஒப்பிட்டுக்கு எடுத்துப் பாருங்களேன் ஒரு மாணவன் தான் படிக்க வேண்டும் என்று புத்தகங்களை எடுத்து வைத்தால் அவனுக்கு படிப்பின் மீதான ஈடுபாடு குறைந்து தூக்கம் தான் வருகிறது இப்படி தூக்கம் வருவதற்கு காரணம் என்ன எனக்கு தெளிவாக தெரிகிறது ! அந்த மாணவனை வேண்டுமென்றே வாழ்க்கையில் தோற்கடிக்க வேண்டும் என்று காலம் நிகழ்த்தும் சதிதான் என்று புரிகிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் பிளாஸ்டிக் துகள்களின் கலப்பு அதிகமாக உள்ளது. இந்த வகையான கலப்புதான் சோர்வு அடைந்து தூக்கம் வரவைக்க காரணமாக உள்ளது என்ற சந்தேகம் எனக்குள்ளே எழுகிறது. வாழ்க்கை என்பது வாழ்வதற்காக தான் இவ்வாறு ஒரு லட்சம் சின்ன சின்ன விஷயங்களும் இவர்கள்தான் ஜெயிக்க வேண்டும் இவர்கள் தான் தோற்க வேண்டும் என்று முன்னதாகவே திட்டமிட்டு முன்கூட்டியே வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு நாடகத்தை போல விதியை பயன்படுத்தி இதனை நிகழ்த்தினால் இது எந்த வகையில் சரியான வாழ்க்கை என்று ஆகும் ? எல்லோருக்குமே சம உரிமைகள் கொடுக்க வேண்டுமா என்பது என்னுடைய வாதம் அல்ல ஆனால் வெற்றி அடைபவர்கள் எல்லோருமே இன்னும் மற்றவர்களை எந்த எந்த விதங்களில் தோற்கடிக்கலாம் என்று அவர்களுடைய பணத்தை பயன்படுத்தி நிறைய சதிவலைகளை பின்னுகிறார்கள். இவைகளில் என்னை கோபப்படுத்தும் ஒரு விஷயம்தான் இப்போதே வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களை போதையிலும் பொழுதுபோக்கு விஷயங்களிலும் ஈடுபடுத்த முடிவை பண்ணி இருப்பதுதான். கண்டிப்பாக சம்மந்தப்பட்ட மனிதர்கள் அனைவரையும் கண்டுபிடித்து தண்டனைகள் கொடுக்க வேண்டும். அடுத்த ஜெனரேஷனையே காலி பண்ணிவிடும் இந்த மாதிரியான விஷயங்கள். கவனமாக இல்லை என்றால் காலம் கழுகு போல நம்மை தூக்கி சென்றுவிடும் என்பது நிதர்சனம் ! காலம் யாருக்குமே நண்பராக இருப்பதே இல்லை. காலம் எப்போது பார்த்தாலும் நம்முடைய கொஞ்ச நாள் வாழ்க்கையை கூட மோசமானதாக மாற்றினால்தான் நிம்மதியாக மன நிறைவாக இருக்கும் ஒரு ஜீவன் ஆகும் ! காலத்தை கவனமாக மட்டுமே கையாள வேண்டும் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...