'
இந்த படம் வெளிவந்த காலத்தில் சூப்பர் ஹிட்டாக மாற காரணம் என்ன ? இந்த படம் என்னதான் தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் ஒரு ஃபேமிலி ஆடியன்ஸ்ஸாக பார்க்க நல்ல படமாக உள்ளது. சந்தோஷ் எப்போதுமே அப்பாவின் கட்டுப்பாட்டுக்குள்ளே முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு அப்படியே வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு பையன். ஒரு கட்டத்தில் சுதந்திரமாக விளையாட்டாக வாழ்க்கையை ரசித்துக்கொண்டு இருக்கும் ஒரு கல்லூரி பெண்ணை பார்த்ததும் காதலில் விழுகிறான். இவர்களுக்கு காதல் கைகூடிய பின்னால் சந்தோஷ்க்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகிய பின்னாலும் பெற்றவர்களின் சம்மதத்தை வாங்க சந்தோஷ் பண்ணும் எல்லா முயற்சிகளும் சேர்த்துதான் இந்த படத்தின் கதை. வழக்கமாக வெளிவந்த துணிந்து வந்தால் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவேன் என்ற டைப் காதல் கதைகளாக இல்லாமல் இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும் படமாக அமைந்து உள்ளது. ஸாங்க்ஸ் பிரமாதம். காமிரா வொர்க் ரொம்பவுமே டீசண்ட்டாக உள்ளது. கொஞ்சம் சீரியல்களை போல சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் (உபயம் : கிளைமாக்ஸ் காட்சி வசனங்கள் ) படத்துடைய கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த குறைகளும் இல்லாமல் இருக்கிறது. நாங்களும் குடும்பம் ஒரு கதம்பம் என்று காதுக்குள் பாதரசம் ஊற்றுவது போல படம் எடுக்கும் வாரிசு போன்ற மொக்கை படங்களை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை பார்ப்பது நல்லது. பொங்கல் இலவச தொகையை அள்ளிக்கொள்ள வாரிசு படத்தை வெளியீடு செய்து நன்றாக சம்பாதித்ததால் மட்டும் ஒரு நல்ல ஃபேமிலி படமாக வாரிசு ஆகிவிடாது. இந்த படம்தான் ஒரு நல்ல ஃபேமிலி படத்துக்கு எக்ஸ்ஸாம்பில். இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !
No comments:
Post a Comment