நிறைய நேரங்களில் நம்மை போல கஷ்டப்படும் மனிதர்களில் ஒரு சில மனிதர்களை பார்க்கும்போது மட்டும்தான் இவர்கள் எல்லாம் எதுக்கு இன்னுமே பூமிக்கு பாரமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று அடுத்தவர்களுக்கு தோன்றும். முட்டாள்தனமான முடிவுகளால் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து தானாக பாம்புகளின் வாய்க்குள் சென்று பாம்பு தன்னுடைய வாயை மூடிக்கொள்ளும் வரைக்கும் காத்திருக்கும் தவளைகள் போன்ற முட்டாள்தனமான மக்கள். இவர்கள் தானும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். இவர்களை எல்லாம் பார்க்கும்போது செய்ய வேண்டிய விஷயங்களை கூட செய்யாமல் கொஞ்சம் கூட பிரியமே இல்லாமல் பிரிந்துவிடலாம் என்று தோன்றுகிறது. தான் தோன்றியான மனப்பான்மை , யார் என்ன சொன்னாலும் கேட்டபதே இல்லை. மிக மிக முட்டாள்தனமான அசல் செயல்பாடுகள் பத்து பைசாவுக்கு தேறாத விஷயங்கள் இவைகளைத்தான் இவர்கள் வேத உபநிடதம் போல செய்துகொண்டு இருக்கின்றார்கள். எதனால் இந்த தவளைகள் பாம்பின் வாய்க்குள்ளே சென்று அடைந்துகொள்ள முயற்சிக்கிறது தெரியுமா ? இவைகளுக்கு சாகவேண்டும் என்று அவ்வளவு ஆசைகள் உள்ளது. இப்படிப்பட்ட ஆட்களுடன் அஸ்ஸோஸியேஷன் வைத்துக்கொள்வது தொங்கும் கயிறை ஒரு அணிகலனை போல அணிவது போன்றதாகும். இவர்களுடைய தொடர் முட்டாள்தனத்தால் எல்லாவற்றையும் இழப்பார்கள். ஒரு கை அல்லது ஒரு கால் உட்பட எல்லாமே இவர்கள் இழந்தாலும் ஆச்சரியம் அடைய எதுவுமே இல்லை. மண்டைக்குள் மூளை என்று ஒரு மேட்டர் இருப்பவர்கள் இந்த தவளைகளை தங்களின் அருகில் வைத்துக்கொண்டு இருக்கவே பயப்படுவார்கள். மூளையே இல்லாதவர்கள் மட்டுமே இந்த மனிதர்களையும் மனிதர்களாக மதித்து கண்ணை மூடிக்கொண்டு முட்டாள்தனமான வகையில் நம்பி அவர்களும் எல்லாவற்றையும் இழப்பார்கள். இவர்களுடைய முட்டாள்தனத்தால் பாதிக்கப்படும் மனிதர்கள் அடுத்தவர்கள்தான். இவர்களுக்கு பாதிப்பு கொஞ்சமானதே. அடுத்தவர்களுக்குதான் இவர்களால் பாதிப்பு அதிகம். வாழ்க்கையை நகர்த்த தெரியாமல் போலி ஆவணங்களில் பயணம் செய்யும் ஒரு வாகன ஒட்டியாக இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய குணம் தொற்று வியாதியை போன்றது. கடைசியில் இவர்கள் நிராதரவாக நிற்பார்கள். சப்போர்ட் என்று யாருமே இல்லாமல் அனாதையாக வாழ்க்கையினை கழிப்பார்கள். இந்த முட்டாள்தனத்தை இவர்களிடம் இருந்து எடுப்பது என்பது கண்டிப்பாக நடக்காத காரியம். இந்த முட்டாள்தனம் சாகும் வரைக்குமே இவர்களுடனேதான் இருக்கும். யாருமே சப்போர்ட் இல்லாமல் இவர்களை புரிந்துகொள்வது கடினமானது. இந்த வாழ்க்கையில் அன்பு , பாசம் , ஆதரவு என்று எல்லாமே சரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. இது போன்ற ஒரு சரியான வாழ்க்கையை அமைக்க கண்டிப்பாக சொந்த முன்னேற்றம் அடையாத இது போன்ற மக்களுடைய அசோசியேஷன்னை மட்டும் நம்பி முடிவு எடுக்க கூடாது. இவர்களுடைய அசோசியேஷன் தற்காலிகமானதுதான். பயனற்ற தவளைகளை பயனுள்ள காளைகளாக மாற்றவேண்டும் என்றால் சிறப்பான மனக்கட்டுப்பாடு இருந்தால் மட்டும்தான் முடியும். நம்முடைய உடலுக்கு கட்டுப்பாடு கொண்டுவந்தால் மனது தானாக கட்டுப்பாட்டுக்குள்ளே வந்துவிடும். இந்த விஷயத்தை மட்டும்தான் இவர்களுடைய வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும். வேறு எதுவுமே இவர்களுக்கு அவசியம் அல்ல.
No comments:
Post a Comment