Thursday, April 4, 2024

TAMIL TALKS - EP. 70 - கடைசியாக காலியாகி விடுவோம் போல இருக்கிறதே !

 



இந்த வலைப்பூ அமைப்புகளை பாருங்களேன். எல்லாமே ஆங்கிலம். ஆங்கில மொழியை தவிர்த்து நம்முடைய தமிழ் மொழி படைப்புகள் என்று இப்போது எல்லாம் எதுவுமே இல்லை. மொழியை காப்பாற்ற போகிறேன் என்று புத்தகங்களை எழுதலாம் ஆனால் வாங்கி படிக்க கூட முடியாது என்ற அளவுக்கு நன்றாக நசுக்கிவிட்ட மொழியாகத்தான் நம்முடைய மொழியை இப்படி மாற்றி வைத்துவிட்டார்கள். இன்றைக்கு தமிழ் நாட்டில் தமிழ் பேசுபவர்கள் என்று வெறும் 80 சதவீதம்தான் இருக்கின்றார்கள் மற்ற எல்லோருமே வேறு மொழி பேசுபவர்கள்தான். இப்போது நிறைய தமிழ் புத்தகங்கள் , தமிழ் கதைகளை , தமிழ் சினிமாக்களை கூட எடுத்துக்கொள்ளுங்களேன். இவர்களுடைய சொந்த மொழியை விட்டுவிட்டு நம்ம மொழி விஷயங்களை பாருங்கள் என்று கட்டாயப்படுத்தினால் அது கண்டிப்பாக இம்போஸிஷன் பண்ணியது போலத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மொழி விட்டு மொழியாக பார்ப்பதால் அவர்களுக்கு கண்டிப்பாக புரியவும் போவது இல்லை. இப்படியே நம்முடைய கதைகளும் கலாச்சாரமும் நிறைத்து கொடுத்தாலும் காப்புரிமை இல்லாமல் காணாமல் போகவேண்டும் என்றே தமிழ் கண்டென்ட்களுக்கு விதியா என்ன ? இந்த விஷயத்தை பாருங்கள். வெளியூரில் வெளி மொழி இருப்பவர்கள் நம்முடைய பாரம்பரியமான உணவுகளை உடைகளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடைய தாய் மொழி மற்றும் மேலை நாடு சங்கீதம்தான் அவர்கள் விரும்புகின்றார்கள். சமீபத்தில் சொல்லுங்கள் வெளிநாட்டு படங்களின் கலேக்ஷனுக்கு நிகரான வெற்றிகளை எந்த தமிழ் படம்தான் வாங்கி கொடுத்து இருக்கிறது. இப்போது புத்தகங்களை படிக்கும் ஆடியன்ஸ் என்று உலகத்தில் நிறைய பேர் இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டில் கொஞ்சமாகத்தான் இருக்கின்றார்கள். ஒரு காலத்தில் சிறுகதைகளுக்கு நல்ல மவுசு இருந்தது ஆனால் இப்போது நாவல்களே கொடுத்தாலும் படிக்க யாருக்குமே பொறுமை இல்லை. தூங்கி தூங்கி வழியத்தான் முடிகிறது. மொழிபெயர்ப்பு பண்ணிய நாவல்களை எல்லாம் படித்துக்கொண்டு இருந்தால் இன்னும் மோசம். ஆங்கிலத்தின் ஸ்டைல்லில் நேரடியான தமிழாக்கம் கொடுத்து படிப்பவர்களுடைய மண்டையை குழம்பி போன குட்டையாக மாற்றிவிடுகிறார்கள். ஒரு புத்தகத்தை நம்முடைய தமிழ் மொழியில் படிப்பது என்பது கண்டிப்பாக 5 - 6 மணிநேரம் செலவு செய்து படிக்க வேண்டிய வேலை. இந்த வேலை மிக கடினமானது. ஒரு புத்தகம் படிப்பதற்கு பதிலாக தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுவிடலாம். ஒரு புத்தகம் எழுதுவதற்கு பதிலாக அதே தொழிற்சாலையில் உரிமையாளராக மாறிவிடலாம். இப்படியே சென்றுக்கொண்டு ஒரு பழைய காலத்து மொழி நன்றாக இன்னொரு வகை கலாச்சாரத்தின் இன்ஸ்பிரேஷன்னால் காலியாக மாறுவதை பார்க்க மனதுக்கு கஷ்டமாக உள்ளது. தொடர்வண்டியில் கூட்டம் கூட்டமாக பயணச்சீட்டு எடுக்காமல் வெட்டியாக அடுத்தவர்களை தொந்தரவு பண்ணிக்கொண்டே பயணம் செய்கின்றார்கள் அல்லவா அவர்களை பார்க்கும்போது எவ்வளவு கோபமாக கஷ்டமாக இருக்கிறதோ அதே அளவுக்கு இந்த தமிழ் மொழியை காலி பண்ண நிறைய சதிகள் நடத்தி வலைகளில் அடைப்பதும் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. கடவுளை பொறுத்தவரை நானும் நக்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று எனக்கு கஷ்டங்களை கொடுக்கிறார் ஆனால் நானும் ஒரு நாள் பதிலுக்கு எனக்கு செய்த எல்லா விஷயங்களுக்கும் கடவுளுக்கு நூறு மடங்கு மோசமாக செய்யத்தான் போகிறேன். கடவுள் பாதிக்கப்பட வேண்டும் அவரை பார்த்து நான் ரசிக்க வேண்டும். இன்றைக்கு தேதிக்கு கருத்து பகிர்வு இவ்வளவுதான்  இதுபோலவே நிறைய போஸ்ட்களை படிக்க வேண்டும் என்றால் இந்த வலைப்பூவை ஃபாலோ பண்ணுங்கள். மேலும் இந்த வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள். இன்னும் நிறைய கருத்துப்பகிர்வு இந்த வலைப்பூவின் உதவியுடன் செய்யலாம். வாழ்க்கையில் வெற்றிகரமான நாட்களை வாழ்ந்துவிட வலைப்பூ குழுவினரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துககொள்கிறோம். 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...