Monday, April 15, 2024

TAMIL TALKS - EP. 90 - என் காதல் சொல்ல நேரம் இல்லை !

 



இந்த உலகத்தில் எப்பொழுதுமே காதலின் மாயாஜாலத்தை யாராலும் மாற்ற முடியாது. காதல் நமக்காக கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பத்தை உருவாக்குவதில் ஒரு பகுதி மட்டுமல்ல. எப்போதுமே காதல் என்பது இயற்கையான விஷயத்திலேயே மிகவுமே மாயாஜாலமானது. காதலிப்பவருக்கு ஒரு பக்கம் வாழ்க்கையில் நிறைகள் மட்டுமே இருந்து கொண்டிருக்கும் அதே நேரம் இன்னொரு பக்கம் காதலிக்கப்படுபவருக்கு வாழ்க்கையில் குறைகள் மட்டுமே இருந்து கொண்டிருக்கும். நிரந்தரமான பாதிப்பால் கடவுள் கூட என்னால் முடியாது என்று கைவிட்ட விஷயங்களை கூட காதல் வந்து காப்பாற்றிவிடும்‌. நம்முடைய மனித ஜென்மத்தில் காதலால் மட்டும் இப்படி ஒரு மாயாஜாலத்தை எப்படி நிகழ்த்த முடிகிறது ? காதலிப்பது சுலபமானது தான் ஆனால் காதலில் வெற்றி அடைவது மிக மிக கடினமானது. குறிப்பாக காதலுக்கு பின்னால் நடக்கக்கூடிய திருமண வாழ்க்கை மிக மிக கடினமானது. திருமணம் என்பது இரண்டு பக்கமும் நிரந்தரமான தகுதிகளை அடிப்படையாகக் கொண்டது. கல்யாணத்தால் இணையக்கூடிய பந்தம் நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நிறைய பொறுப்புகளை நமக்கு கொடுக்கிறது ஆனால் அதற்கான சக்திகள் நமக்கு கிடைப்பதில்லை நாம் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சக்திகள் அதிகரிக்கும் போது நம்முடைய பொறுப்புகள் அதிகமாகும் என்று வசனங்கள் எல்லாம் இருக்கிறது. நிறைய நேரங்களில் திருமண வாழ்க்கையில் பொறுப்புகள் மட்டும் தான் அதிகரிக்கிறது ஆனால் சக்திகள் அதிகரிப்பதே இல்லை. காதலை பற்றி இன்னொரு முக்கியமான கருத்தும் என்னிடம் உள்ளது. காதல் ஒருவருக்கு ஒருவர் மேல் மட்டும்தான் வரும். இருவர் மீது வரும் காதல் என்றால் இரண்டு பக்க காதலும் பொய்யானதே ! உண்மை என்பது ஒன்றுதான். பொய்கள்தான் கணக்கு இல்லாத எண்ணிக்கையில் இருக்கக்கூடியது. காதலை விட வாழ்க்கை பெரிய விஷயம் என்பதால் வாழ்க்கையை ஜெயித்தால் மட்டுமே காதலில் ஜெயித்த வெற்றியை அனுபவிக்க முடியும். இந்த ஒரு சின்ன பிரச்சனைதான் காதல் சொல்ல மட்டும்அல்ல காதல் பண்ணவே நேரம் இல்லை என்ற ஒரு நிலைப்பாடை உருவாக்கிவிடுகிறது.


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...