இந்த நாள் போல தோல்விகரமாக இன்னொரு நாள் இருக்க கூடாது. ஒரு ஒரு முறையுமே இந்த போராட்டம் தோல்வியில் முடிவதற்கு காரணம் வாழ்க்கையை நான் என்னைக்குமே விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் அனுக்குமுறைதான் என்று எனக்கு மிகவுமே தாமதமாக மட்டும்தான் புரிகிறது. இப்போதே நான் நிறைய விஷயங்களை இழந்துதான் நிற்கின்றேன். இனிமேல் இப்படி ஒரு சாதனையாக பண்ண வாழ்க்கை இடம் கொடுக்குமா என்று கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். ஒரு நாளில் கட்டுரைகள் எழுதும்போது சுற்று சூழல் மாற்றம் கொண்டுவந்தால் போதும் மனிதர்களுடைய வாழ்க்கையை சாதனை சின்னமாக மாற்றிவிடலாம் என்று சமூகம் சொல்லுகிறது. இன்னொரு நாளில் இப்படி சொன்ன இதே சமூகம்தான் சுற்று சூழலில் எல்லாம் மாற்றங்களை கொண்டுவர முடியாது ஆனால் நமக்குள்ளே மாற்றங்களை கொண்டுவந்தால் நாம் நல்லா இருக்கலாம் என்று சொல்கிறது. சொல்லப்போனால் இரண்டு வகை மாற்றங்களுமே தேவை. நம்மை யாராவது அடிக்கும்போது திரும்ப அடித்து நொறுக்காமல் மன்னித்துவிட்டு வானத்தை போல மனம் படைத்த வல்லவனே என்று பின்னணி சாங்க் போட்டுக்கொண்டு சென்றுக்கொண்டு இருந்தால் நம்மை விட முட்டாள்தனமான நஷ்டத்தை யாருமே அடைய மாட்டார்கள். இன்றைக்கு தேதிக்கு உங்கள் கைகளில் ஆட்சி இருக்கிறதா பொதுமக்கள் எல்லோருக்கும் யூனிஃபார்ம் போடவேண்டும் என்று அதிகாரம் போடுங்கள். உலகமே உங்கள் சொல்பேச்சு கேட்டு உங்களுக்காக இறங்கி நடக்கும். இந்த உலகத்துடைய முன்னேற்றத்தை போதை தடுக்கின்றது என்று நம்புகிறீர்களா ? அப்படியென்றால் போதையை தடை பண்ணுங்கள். இன்னும் என்ன வேண்டுமென்றாலுமே பண்ணுங்கள். அதிகாரம் உங்களுடையை கைகளுக்கு வந்துவிட்டால் உங்களால் என்ன வேண்டுமென்றாலும் பண்ண முடியும். அதுபோக நீங்கள் சொல்வதுதான் சட்டம் நீங்கள் செய்வதுதான் வரலாறு என்று ஒரு கௌரவமான வாழ்க்கை உங்களுக்கு அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே கிடைக்கும். இதுதான் வாழ்க்கை வேலை பார்க்கும் முறை.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக