Thursday, April 4, 2024

MUSIC TALKS - ULAGINIL MIGA UYARAM MANIDHANIN SIRU IDHAYAM - SONG LYRICS - VERA LEVEL PAATU !





உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்

நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள் விதி போகும் திசையில் நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும் தடை நூறு கடந்து போராடு

உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்


கடலினில் கலந்திடும் துளியே கவலை எதுக்கு

அலையுடன் கலந்து நீ ஆடு வாழ்க்கை உனக்கு

உறவுகள் இனி உனக்கெதுக்கு உலகம் இருக்கு

வலிகளை தாங்கிடும் கல்லில் சிலைகள் இருக்கு


அலைகள் அலைக்கழிக்கும் ஓடம் தான் கடலை தாண்டி வந்து கரையேறும்

ஊசி துளைக்கும் துணி மட்டும் தான் உடுத்தும் ஆடையென்று உருவாகும்

இருளில் இருந்து வெளிச்சம் பிறக்கும் எப்போதும்


உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்

நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்


கனவுகள் சுமந்திடும் மனமே உறக்கம் எதற்கு இருக்குது உனக்கொரு பாதை நடக்க தொடங்கு

தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு நடப்பது நடக்கட்டும் வாழ்வில் கடக்க பழகு

இடிகள் இடிக்கும் அந்த வானம் தான் உடைந்து விழுவதில்லை எப்போதும்

அடியை தாங்கிகொள்ளும் நெஞ்சம் தான் அடுத்த அடியை வைத்து முன்னேறும்

நினைப்பின் படியே எதுவும் நடக்கும் எப்போதும்

உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்

நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள் விதி போகும் திசையில் நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும் தடை நூறு கடந்து போராடு



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...