இது போல ஒரு கதையை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம் ! காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது"சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய். என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்.!" என்று சொன்னது. அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது. சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய். என்னுடன் வா , இந்த காடு எவ்வளவு சுதந்திரமானது என்று காட்டுகிறேன். " இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து தூக்கி எறிந்து விட்டு எலியுடன் சென்றது. அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது. இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது. "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள். இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா ?. என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன். " இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன. "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்?" அப்பொழுது சிங்கம் சொன்னது. "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். டெய்லி இவனுக்கு இதான் வேலையே." என்றது. பிரச்சனை என்னவென்றால் இங்கே எல்லோருமே போதை போன்ற மோசமான விஷயங்களுக்கு அடிமையானால் வாழ்க்கை நல்லாவே இருக்காது. இந்த ஸ்டோனர் காமெடி வகையறாக்கள் மக்கள் தங்களுடைய இயலமையின் காரணமாகவும் சந்தோஷம் இல்லாத வாழ்க்கையின் தொடர்ச்சியான சலிப்பின் காரணத்தாலும் போதையை கலாச்சாரத்தின் மாற்றத்துக்கான பாதை என்று நினைக்கின்றார்கள். நீங்கள் கடைசியாக எப்போது குப்பையான உணவுகளை தவிர்த்து உடலுக்கு ஊட்டமான மேலும் வலுவை கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு இருக்கின்றீர்கள் ? உங்களுடைய மனசு வருத்தமாக இருக்கிறதா ? உடலை வலுப்படுத்துங்கள் ! உங்களுடைய வாழ்க்கை சலிப்பாக இருக்கிறதா ? சத்தாக சாப்பிட்டு உடலின் முதிர்ந்த செல்களுக்கு இளமை செல்களை கொடுங்கள். மாயாஜாலம் உங்களுடைய மனதில் இல்லை. உங்களுடைய உடலில்தான் உள்ளது. போதை கலாச்சாரம் தூக்க மாத்திரைக்கு பதிலாக விஷம் சாப்பிடுவது போன்றதாகும். கார் உடைந்து விட்டதே என்று மூலையில் நிறுத்தி வைத்துவிட்டால் கடைசியில் கார் துருப்பிடித்து கறை படிந்து எலிகளுக்கு ஹோட்டல்லாக மாறிவிடும். பின்னாட்களில் குப்பைக்கு சென்றுவிடும். அது போலவே உங்களுடைய உடலும் ஒரு இயந்திரம்தான். ஒரு பாகம் கெட்டுப்போனால் இன்னொரு பாகத்தை மாற்றி உடலை புதிது போல இயங்க வைக்க வேண்டும் என்றால் சரியான உணவாக தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். உடம்பின் எந்த வகை போதையையூம் உடலை ஊட்டம் பண்ணி பலமாக மாற்றுவதன் மூலமாக சரிபண்ணி விடலாம். போதை செலவைதான் கொடுக்கும். கண்டிப்பாக வரவை கொடுக்காது. உடலை உறுதி பண்ணினால்தான் வெற்றிகளை அடைய முடியும். சத்துள்ள உணவுகள் , மூலிகை தேநீர் எடுத்துக்கொள்ளவும். சாப்பிட்ட விஷயங்கள் 100 சதம் செரிமானம் ஆக அனுமதிக்கவும். உடலை மாற்றிவிட்டால் மனம் தன்னால் மாறிவிடும். டாக்ட்டரிடம் போவது எல்லாம் எக்ஸ்ஸேப்ஷனான மனதின் பிரச்சனைகளுக்கு மட்டும்தான் சரியானதாக இருக்கும். மற்றபடி பொதுவான மனதின் பிரச்சனைகள் வெறும் உடலை வலிமை பண்ணுவதால் மட்டுமே தீர்ந்துவிடும். மூளை நன்றாக யோசிக்கக்கூடிய ஒரு CPU - போதுமான விஷயங்கள் கிடைத்தால் மட்டுமே மூளை நன்றாக வேலை பார்க்கும். உடலை வலிமை பண்ணுவது 2-3 வருடங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பெரிய ப்ரோஸேஸ். இந்த விஷயத்தை செய்ய சோம்பேறித்தனம் அல்லது இயலாமை இருந்தால் வாழ்க்கையின் 95 சதவீத விஷயங்களில் சாதிக்கவே முடியாது. இந்த மாதிரியான நல்ல விஷயங்களை யாருமே இப்போது செய்வது இல்லை. இதனால்தான் போதை கலாச்சாரததுக்கு அடிமையாக மாறுகிறார்கள் என்பதே எனது தனிப்பட்ட கருத்து !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment