Sunday, April 7, 2024

GENERAL TALKS - உயரமும் தரைமட்டமும் இருக்க கூடாது !




இந்த கற்பனையான கதையிலும் ஒரு கருத்து இருக்கிறது. சாலையில் எதிச்சியாக சந்தித்த ஒரு ஏழை இளைஞரை பார்த்து ஒரு பணக்கார செல்வந்தர் கேட்கிறார். "இவ்வளவு முயற்சிகளை எடுத்தும் இன்னும் வேலை கிடைக்கவில்லையா ?" என்று அதுக்கு அந்த இளைஞர் பதில் சொன்னார்.  "சார்…போன வருடம் எதிர்பாராமல் என்னுடைய வேலை போய்விட்டது. நானும் கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை என்றார். இளைஞர் சாலித்துக்கொண்டார். இது எதிர்பார்த்ததுதான். வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒன்றா…? ஆச்சரியமாக கேட்டான்.  எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான்  “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" "ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்”. 'முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு' என்று இளைஞரின் மனம் குதூகலத்தில் மூழ்கியது. “சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப் போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான். “இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” அதைக்கேட்ட இளைஞருக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. “என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான். “ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை.  நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காக தான்.” “எனக்கு வாழ்க்கையையே கொடுத்த தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்”.. இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. இளைஞரிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் இளைஞன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான். புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கைகளில் ஸ்டைல்லாக வாட்ச் அணிந்துகொண்டான். இரவு பகலாக இலாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிசினஸ்  பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான் “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. கடைசியாக ஃபோன் கூட பண்ணி பேசவே இல்லையே. இங்கே உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான். அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட இளைஞரிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார். “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்” என்று ரூல்ஸ் பேசினான். அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்? ஒரு செகண்ட் யோசிங்களேன் இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது. நீங்கள் எல்லோருக்குமே நல்ல விஷயமே செய்தாலும் உங்களுடைய நேரத்தை செலவு செய்து அவர்களோடு பேச வேண்டும். நீங்கள் அவர்களுக்கு நல்ல விஷயம் பண்ணிவிட்டீர்கள் என்று ஒரே காரணத்துக்காக உரிமைகளை எடுத்துக்கொண்டு அவர்களை தாழ்வாக நடத்த உங்களுக்கு கண்டிப்பாக உரிமைகள் இல்லை. இங்கே எல்லோருக்குமே இந்த ரேகக்னேஷன் கண்டிப்பாக தேவை. நீங்கள்தான் மேலே அடுத்தவர்கள் தரையிலே என்று பாரபட்சம் பார்த்து நடந்துகொள்ள வேண்டாம். 

1 comment:


  1. ஒரு NANO கார் ஹைவே'ல பழுதாகி நின்னிருச்சு. அதுக்கு உதவி செய்ய ஒரு AUDI கார் உரிமையார் முன்வராரு.

    "நான் உங்க NANO காரை அடுத்த ஊர்வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன் .
    எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுனு தோனுனா நீங்க உங்க ஹெட்லைட்ட டிம்/பிரைட் பண்ணுங்க'ன்னாரு
    டோப்பிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போயிருக்கும் போது,
    அந்த AUDI கார ஒரு BMW கார் செம வேகத்துல ஓவர்டேக் செய்யுது...! AUDI கார்க்காரர் காண்டாயிடுராரு...

    "AUDI காரை, BMW கார் ஓவர்டேக் பண்ணுறதா ? நெவர்..."

    ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி...
    150 கிலோமீட்டர் ஸ்பீடு...
    NANO க்காரர் லைட்ட போட்டுப்போட்டு அணைக்கிறாரு, பயந்துகிட்டு...
    ஆனா AUDI காரர் கண்டுக்கவே இல்ல. வேகமும் குறைக்கல.

    இதப் பாத்த ஒரு போலீஸ்க்காரர் தன்னோட வாக்கிடாக்கிய எடுத்து அடுத்த செக் போஸ்ட்ல கூப்பிட்டு சொல்றாரு...

    ஒரு AUDI காரும், BMW காரும் போட்டி போடுறாங்க 150 கிலோமீட்டர் ஸ்பீடு...!

    அதுல முக்கியமான விஷயம் என்னன்னா? ஒரு NANO கார் அவங்கள ஓவர்டேக் பண்ண லைட்ட அடிச்சுக்கிட்டே பின்னாடியே விரட்டிக்கிட்டு போகுது...!

    யாருக்கு என்ன பிரச்சினைன்னு இங்கே யாருக்கும் தெரியாது. எதையோ பாக்குறது, கேக்குறத வச்சு அவர்களாவே ஒரு யூகத்துக்கு வந்து முடிவும் பண்ணிடுவாங்க...!

    ReplyDelete

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...